வடதெருவுக்கு வாய்ப்பா; வினையா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வடதெருவுக்கு வாய்ப்பா; வினையா?

Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (25)
Share
டெல்டா மாவட்டங்களில் ஒன்றான, புதுக்கோட்டையில் உள்ள வடதெரு கிராமத்தில், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை, மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை வெளியிட்டுள்ளது. இதற்கு, தமிழக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
 வடதெருவுக்கு வாய்ப்பா; வினையா?

டெல்டா மாவட்டங்களில் ஒன்றான, புதுக்கோட்டையில் உள்ள வடதெரு கிராமத்தில், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை, மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை வெளியிட்டுள்ளது. இதற்கு, தமிழக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


ஒப்பந்தம்வழக்கம் போல, 'ஹைட்ரோ கார்பன் எடுப்பதால், டெல்டா மண்டலமே சீரழிந்து விடும், விவசாயம் பொய்த்து விடும், மக்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்' என்ற கருத்துகள், முன்வைக்கப்படுகின்றன. இந்த ஏல அறிவிக்கையை முழுமையாக படிக்கும் போது, பல்வேறு விபரங்கள் தெரிய வருகின்றன.முதலில், வடதெரு கிராம பகுதியின் கீழே, எண்ணெய் இயற்கை வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதை துரப்பணம் செய்து பிரித்து எடுப்பதற்கான ஒப்பந்தம், 2007ம் ஆண்டே வழங்கப்பட்டு உள்ளது.

அது ஏதோ, இப்போது தான் வழங்கப்படுகிறது என்ற எண்ணம் வேண்டாம். அப்போது தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி தான் இருந்தது. 'கே.இ.ஐ., - ஆர்.எஸ்.ஓ.எஸ்., மேரிடைம் லிமிடெட்' என்ற, ஆந்திர பிரதேச நிறுவனத்துக்கு, இந்த ஒப்பந்தம் அப்போதே வழங்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. இது, 20 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் என்பதால், 2027 வரை செயல்பாட்டில் இருக்கும்.நிதி நெருக்கடி காரணமாக, இந்த நிறுவனமே திவாலாகி விட்டது.

தற்போது, இது திவால் சட்டத்தின் கீழ், வேறொரு நிறுவனத்தால் கையகப்படுத்துவதற்காக காத்துஇருக்கிறது என்பது, இந்த விஷயத்துக்குத் தொடர்பில்லை என்றாலும், தெரிந்து கொள்ள வேண்டிய கிளைக் கதை. இன்னமும், கே.இ.ஐ., - ஆர்.எஸ்.ஓ.எஸ்., நிறுவனத்திடம் தான், வடதெரு எண்ணெய் கிணறுகளை துரப்பணம் செய்வதற்கான ஒப்பந்தம் உள்ளது. அதனால், இப்போது புதிதாக எதற்கு ஏலம் விட மத்திய பெட்ரோலியத்துறை முயற்சி செய்ய வேண்டும்?அங்கே தான், ஏல அறிவிக்கையில் உள்ள வரைபடங்கள், விபரம் சொல்கின்றன. மேலும், எந்தப்பகுதி, எவ்வளவு ஏக்கர் ஏலத்துக்கு விடப்படுகிறது என்ற, விபரமும் குறிப்பிடப்பட்டுள்ளது.வாய்ப்பில்லைlatest tamil news
மொத்தம், 463.2 சதுர கிலோ மீட்டர் நிலம், ஹைட்ரோ கார்பன் துரப்பண மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.அந்தக் கிராமம் இவ்வளவு பெரிய பகுதியாக இருக்க வாய்ப்பில்லை. அந்தப் பகுதியை ஒட்டியிருக்கும், கடற்கரையோரத்தில் ஹைட்ரோ கார்பன் இருப்பது வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளது. ஏல அறிக்கையில், Cauvery / Tamilnadu & Cauvery Offshore என்று தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஹைட்ரோ கார்பனுக்காக மேம்படுத்தப்பட வேண்டிய பகுதி, கடற்கரையோரம் உள்ள பகுதி என்ற கருத்தையே, இந்த ஏல அறிவிக்கை தருகிறது. பொதுவாக, இந்திய கடற்கரையோர பகுதிகள் பலவற்றில், எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சிறு எண்ணெய் வயல்களை மேம்படுத்தும் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த ஏலமும், அதுபோன்ற சிறுசிறு எண்ணெய் வயல்களை மேம்படுத்துவதற்காக, தனியாருக்கு ஏலம் விடும் முயற்சியே.மேலும், இந்த வடதெரு கிராமம், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் கீழ் வருகிறது. அதனால், இங்கே ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுக்கும் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்ற, கருத்தும் சொல்லப்படுகிறது.


அனுமதிடெல்டா மாவட்டங்களில், ஒரு சில குறிப்பிட்ட துறை சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தான் சட்டம் சொல்கிறதே தவிர, ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட திட்டங்களை பற்றி, இந்தச் சட்டம் எந்த தெளிவையும் தரவில்லை. அதாவது, அதைத் தடுத்து நிறுத்தச் சொல்லவில்லை.பூமித்தாய் நமக்கு ஏராளமான வளங்களைக் கொடுத்து வாழ வைக்கிறாள். அரிசியும், ஹைட்ரோகார்பனும் அவள் கொடை தான். இதில் ஒன்றை ஏற்பதும், மற்றொன்றை விலக்குவதும் நம் அறியாமை தானே! - நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X