பொது செய்தி

இந்தியா

'ஹால் மார்க்' முத்திரை: இன்று முதல் கட்டாயம்

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி : தங்க நகையின் தரத்தை குறிக்கும் 'ஹால் மார்க்' முத்திரை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 256 மாவட்டங்களில் இன்று (ஜூன் 16) முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.தங்க நகைகள் 2021ம் ஆண்டு ஜனவரி 15 முதல் 'ஹால் மார்க்' முத்திரையுடன்தான் விற்க வேண்டும் என 2019ம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசு அறிவித்து இருந்தது. கொரோனா பரவலால் ஒத்தி வைக்கப்பட்டது.
hallmark, gold, Gold Jewellery, Hallmarking

புதுடில்லி : தங்க நகையின் தரத்தை குறிக்கும் 'ஹால் மார்க்' முத்திரை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 256 மாவட்டங்களில் இன்று (ஜூன் 16) முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.

தங்க நகைகள் 2021ம் ஆண்டு ஜனவரி 15 முதல் 'ஹால் மார்க்' முத்திரையுடன்தான் விற்க வேண்டும் என 2019ம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசு அறிவித்து இருந்தது. கொரோனா பரவலால் ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தங்க நகை விற்பனையார்களுடன் ஆலோசனை நடத்தினார்.


latest tamil news



இந்தக் கூட்டத்தில் நாடு முழுவதும் முதற்கட்டமாக 256 மாவட்டங்களில் 'ஹால் மார்க்' முத்திரையை கட்டாயமாக்க முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி உத்தரவு அமலுக்கு வந்துள்ள 256 மாவட்டங்களில் இன்று முதல் 'ஹால்மார்க்' முத்திரை கொண்ட 14, 18, 22 காரட் தங்க நகைகள் மட்டுமே விற்க வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
neerathilingam s - rajapalayam,இந்தியா
16-ஜூன்-202113:18:00 IST Report Abuse
neerathilingam s யாரும வாங்காத பொருள் விலை கூடுவதை பார்க்க முடியுமா இது மட்டும் கூடுகிறது எப்படி அரசு தான் விளக்க வேண்டும் ஹால் மார்க் யாருக்கு தேவை அரசு 2014 பதவி ஏற்கும் போது இருந்த விலைக்கும் இப்போது இருக்கும் விலைக்கு வித்யாசம் சுமார் 2000 ரூபாய் கூடியுள்ளது எல்லா விலை குறைப்பேன் என்று கூறிவிட்டு இது கூடுவதற்கு என்ன காரணம் என்பதை சரி செய்ய வேண்டும். M.R.P. கும் உற்பத்திக்கும் உள்ள வித்தியாசம் நிறையாக உள்ளது அதை சரி செய்ய வேண்டும் இது எல்லா பொருளுக்கும் பொது. மருத்துவ பொருளை மிக விரைவாக கவனிக்க வேண்டும்
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
16-ஜூன்-202109:23:46 IST Report Abuse
Sampath Kumar இந்த முத்திரையை மிக எளிதாக தயாரித்து குத்திவிடுவார்கள் அதற்கு பத்தி கடைகர்லால் அனைவரும் (பி.ம்.இ) பாசிட்டிவ் மெட்டல் ஐடென்டிபிகேஷன் கருவி ஏதன் மூலமாக மக்கள் வாங்கும் தங்கத்தின் தரத்தை எளிதில் உறுதிசெயலாம் அதனை அரசு வருடத்திற்கு ஒருமுறை பரிசோதித்து கடைக்கு உரிமைத்தை வழக்கலாம் . நகை கடை காரர்களை இக்கருவியை வாங்க அரசு வலியுறுத்துமா ?/
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
16-ஜூன்-202108:53:16 IST Report Abuse
GMM கடையில் தங்கம் விற்பனை செய்ய 'Hallmark' முத்திரை கட்டாயம் என அரசு ஆணை சரியே. தங்கம் கிடைக்கும் விவரம் அரசுக்கு தெரியும். கடத்தல் தங்கம் விற்பனை குறையும். மக்கள் தரம் உறுதி செய்ய முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X