இது உங்கள் இடம்: மதுக்கடையை திறப்பது நியாயமா...| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: மதுக்கடையை திறப்பது நியாயமா...

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (62)
Share
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:எஸ்.பிரசன்னா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, 'ஊரடங்கு நேரத்தில், மதுக்கடை எதற்கு?' என, தன் வீட்டின் முன் பதாகை துாக்கி போராடினார். அவர் முதல்வரானதும், கொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாக இருக்கும்போது, ஊரடங்கு
Tasmac, reopen, CM Stalin, DMK govt, liquor shop


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


எஸ்.பிரசன்னா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, 'ஊரடங்கு நேரத்தில், மதுக்கடை எதற்கு?' என, தன் வீட்டின் முன் பதாகை துாக்கி போராடினார். அவர் முதல்வரானதும், கொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாக இருக்கும்போது, ஊரடங்கு காலத்தில் மதுக்கடையை திறக்க உத்தரவிட்டிருக்கிறார்.இந்த கொடுமையை என்னவென்று சொல்வது?

தினசரி, 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க., அரசு டாஸ்மாக் கடையை திறந்தது. தி.மு.க., அரசோ, தினமும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கும் போது, மதுக்கடையை திறக்கிறது. டாஸ்மாக் கடையை ஏன் திறக்கிறோம் என்பதற்கு, முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, 'போலி மது, கள்ள மது போன்ற தீமைகள் தமிழகத்தை சீரழித்து விடக் கூடாது என்பதாலேயே, டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.,விற்கு வந்தால் தக்காளி சட்னி; தி.மு.க.,விற்கு வந்தால் மட்டும் ரத்தமா?


latest tamil newsடீக்கடை திறக்காத நிலையில், மதுக்கடை இயங்க, தி.மு.க., அரசு உத்தரவிட்டது. எதிர்ப்பு வலுத்ததால், டீக்கடையை திறக்க அனுமதி அளித்துள்ளது. அதாவது, எப்படி இருந்தாலும், டாஸ்மாக் கடையை திறந்தே ஆக வேண்டும் என்பது தான், தி.மு.க., அரசின் நிலைப்பாடு. 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மது ஆலைகளை மூடுவோம்' என உறுதியளித்த கனிமொழி, இப்போது எங்கே இருக்கிறார்? முந்தைய ஆட்சியில் எது நடந்தாலும், 'டுவிட்டர்' மூலம் கருத்து கூறும் நடிகர் கமலை எங்கே காணவில்லை?


latest tamil news


அ.தி.மு.க., அரசு டாஸ்மாக் கடையை திறந்தபோது போராட்டம், எதிர்ப்பு பாடல், வீட்டு முன் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியோர் அனைவரும் இப்போது, கண், காது, வாய் என அனைத்தையும் மூடிக் கொண்டுள்ளனரா? முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்.,சை இழிவுப்படுத்தி 'கார்ட்டூன்' வரைந்த ஊடகங்கள், இப்போது முதல்வர் ஸ்டாலினுக்கு 'சப்பை கட்டு' கட்டுவது ஏன்? மேற்கண்டோர் அனைவரும், வாங்கிய பணத்திற்கு வஞ்சகமில்லாமல் தேவையான அளவிற்கு கூவினர். அவர்கள் எதிர்பார்த்தபடியே தி.மு.க., ஆட்சி அமைந்து விட்டது. எனவே, 'மச்சி, ஓபன் தி பாட்டில்!'

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X