பொது செய்தி

இந்தியா

'டுவிட்டர்' நிர்வாகத்துக்கு பார்லி., குழு 'சம்மன்'

Added : ஜூன் 16, 2021
Share
Advertisement
புதுடில்லி:சமூக ஊடக தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்கக்கோரி 'டுவிட்டர்' நிர்வாகத்துக்கு 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது.சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அமல்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு நடக்க அறிவுறுத்தி சமூக வலைதளமான டுவிட்டர் நிர்வாகத்திற்கு மத்திய அரசு

புதுடில்லி:சமூக ஊடக தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்கக்கோரி 'டுவிட்டர்' நிர்வாகத்துக்கு 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அமல்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு நடக்க அறிவுறுத்தி சமூக வலைதளமான டுவிட்டர் நிர்வாகத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் 'நோட்டீஸ்' அனுப்பியது.இதற்கிடையே துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்டோரின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கிற்கு வழங்கப்பட்டிருந்த 'புளூ டிக்' வசதியை டுவிட்டர் நிறுவனம் சமீபத்தில் திடீரென நீக்கியது.

தகவல் தொழில்நுட்பத் துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு டுவிட்டர் நிர்வாகத்திற்கு நேற்று சம்மன் அனுப்பியது. காங். மூத்த தலைவர் சசி தரூர் தலைமையிலான இந்த பார்லி. குழு பேஸ்புக் உள்ளிட்ட மேலும் பல சமூக ஊடகங்களுக்கும் சம்மன் அனுப்பி வைத்தது.சமூக ஊடக தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கோரி டுவிட்டர் நிர்வாகத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையே மத்திய அரசின் புதிய ஒழுங்குமுறை விதிகள் அடிப்படையில் புகார்களை விசாரிக்க இந்தியாவுக்கான தலைமை அதிகாரியை, டுவிட்டர் நிர்வாகம் நியமித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X