வவ்வால் உயிருடன் கூண்டில் அடைப்பு: சீனாவுக்கு எதிராக வீடியோ ஆதாரம்

Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
பீஜிங் : நம் அண்டை நாடான சீனாவின் வூஹானில் உள்ள ஆய்வு கூடத்தில் இருந்து, கொரோனா வைரஸ் பரவியதாக பரவலாக கூறப்பட்டு வரும் நிலையில், அங்கு, கூண்டில் வவ்வால்கள் உயிருடன் அடைக்கப்பட்டுள்ளது தொடர்பான, 'வீடியோ' வெளியாகி உள்ளது.சீனாவின் வூஹான் நகரில், 2019 இறுதியில் கொரோனா வைரஸ் முதன்முதலில் தென்பட்டது. உலகெங்கும் பரவியுள்ள நிலையில், 'வைரஸ் பாதிப்புக்கு சீனாவே காரணம்' என, பல
Bats, China, Corona Virus, Covid 19

பீஜிங் : நம் அண்டை நாடான சீனாவின் வூஹானில் உள்ள ஆய்வு கூடத்தில் இருந்து, கொரோனா வைரஸ் பரவியதாக பரவலாக கூறப்பட்டு வரும் நிலையில், அங்கு, கூண்டில் வவ்வால்கள் உயிருடன் அடைக்கப்பட்டுள்ளது தொடர்பான, 'வீடியோ' வெளியாகி உள்ளது.

சீனாவின் வூஹான் நகரில், 2019 இறுதியில் கொரோனா வைரஸ் முதன்முதலில் தென்பட்டது. உலகெங்கும் பரவியுள்ள நிலையில், 'வைரஸ் பாதிப்புக்கு சீனாவே காரணம்' என, பல நாடுகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. வூஹானில் உள்ள வைரஸ் ஆய்வு கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது இந்த வைரஸ். அங்கிருந்து பல நாடுகளுக்கு பரவியதாக சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சீனா நடத்தியுள்ள உயிரி ஆயுத தாக்குதல் என்றும் கூறப்படுகிறது. வூஹான் ஆய்வு கூடத்தில், சீனாவுடன் இணைந்து, உலக சுகாதார அமைப்பு ஆய்வு செய்தது. அங்கிருந்து வைரஸ் பரவியிருக்க வாய்ப்பில்லை என, உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஆனால் வூஹான் ஆய்வு கூடத்துக்கு எதிராக தொடர்ந்து பல ஆதாரங்கள், தகவல்கள் வெளிவருகின்றன.


latest tamil news


இந்நிலையில், வூஹான் ஆய்வு கூடத்தில் கூண்டுக்குள் வவ்வால்கள் உயிருடன் அடைக்கப்பட்டுள்ளது தொடர்பான, 'வீடியோ' வெளியாகி உள்ளது. இந்த வவ்வால்களுக்கு அங்குள்ள விஞ்ஞானிகள், புழுவை உணவாக கொடுக்கும் காட்சியும் அதில் இடம் பெற்றுள்ளது.

உலக நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைக்க, சீனா தான், திட்டமிட்டு கொரோனா வைரசை பரப்பியது என்ற, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் இந்த வீடியோ உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
காலணிகள் பழுது நீக்குவோர் சங்கம், பண்டாரம் தெரு, குருமாவளவன் நகர் , திம்மவாலனுபுரம் நானும் சீன பொருட்களை வாங்குவதில்லை. சமீபத்தில் கைபேசி வாங்கினேன். காளான் போல் வளர்ந்திருக்கும் சீன மொபைல் பிராண்டுகளுக்கிடையே தென் கொரிய நிறுவனத்தின் கைபேசியை வாங்கினேன். ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்ட இடம் சீனா என்றால் அப்பொருளை வாங்குவதை தவிர்க்கிறேன். சீனாவுடனான இந்திய உறவுகள் இனி மேம்பட்டாலும் ஒரு போதும் இனி சீன தயாரிப்பு பொருளை வாங்க மாட்டேன்.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
16-ஜூன்-202111:45:29 IST Report Abuse
Visu Iyer 2019 இறுதியில் கொரோனா வைரஸ் முதன்முதலில் தென்பட்டது/// வைரஸ் பரவுவதற்கு ஒரு மாதம் முன்பு தான் சீன அதிபர் இந்தியாவில் மகாபலிபுரத்தில் பிரதமர் மோடி ஜி யுடன் சந்திப்பு நடத்தினார்... என்பது தான் நினைவில் வருகிறது.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஜூன்-202118:10:38 IST Report Abuse
தமிழவேல் பரவல் வந்தபிறகுதான் டொனால்ட் ட்ரம்ப் (தேர்தலுக்கு) க்கு அரசு செலவில் இங்கு விழா எடுத்ததும்....
Rate this:
Cancel
SENTHILKUMAR S - CHENNAI,இந்தியா
16-ஜூன்-202110:31:52 IST Report Abuse
SENTHILKUMAR S இது உண்மையே . உலகநாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைத்து உலகில் பொருளாதாரத்திலும் தானே வல்லரசாக இருக்க செய்த முயற்சிதான் இந்த சீன தாக்குதல். சீனாவில் வூஹான் மாகாணம் தவிர வேறு எங்குமே கொரோன தாக்கம் இல்லை என்பதே இதற்கு சான்று. ஆனால் உலக சுகாதார அமைப்பும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளதால் உண்மை வெளிவராது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X