பொது செய்தி

இந்தியா

தடுப்பு மருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்: பாரத் பயோடெக்

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
ஐதராபாத்: இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் 2-வது அலை அதிவேகமாகப் பரவிவருகிறது. இதனை அடுத்து தடுப்பு மருந்து செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. மாநில அரசுகளின் தொடர் முயற்சி காரணமாக பல்வேறு இந்திய மாநிலங்களில் வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.தினசரி வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் காட்டிலும் குணமாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாரத் பயோடெக்
Bharat Biotech, Covaxin, Corona Vaccine

ஐதராபாத்: இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் 2-வது அலை அதிவேகமாகப் பரவிவருகிறது. இதனை அடுத்து தடுப்பு மருந்து செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. மாநில அரசுகளின் தொடர் முயற்சி காரணமாக பல்வேறு இந்திய மாநிலங்களில் வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

தினசரி வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் காட்டிலும் குணமாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான தடுப்பு மருந்து ஒரு டோஸ் 150 ரூபாய்க்கு விற்க திட்டமிடப்பட்ட நிலையில் சந்தையில் ஏற்படும் ஏற்ற இரக்கம் காரணமாக போட்டியை சமாளிக்க மேலும் அதிக விலைக்கு தடுப்பு மருந்து விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் செலுத்தப்படும் கோவாக்ஸின் தடுப்பு மருந்துக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கு மாநில அரசுகள் கட்டுப்பாடு விதித்துவரும் நிலையில் தற்போது பாரத் பயோடெக் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.


latest tamil news


வருங்காலத்தில் தடுப்பு மருந்து போக்குவரத்து மற்றும் விற்பனை ஆகிய செயல்களை சரியாகச் செய்ய தனியார் மருத்துவமனைகள் 150 ரூபாய்க்குமேல் தடுப்பு மருந்துகளை விற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

இதற்கு மாநில அரசுகள் அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. வசதி உள்ளவர்கள் பணத்தை செலுத்தி தனியார் மருத்துவமனைகளில் தடுப்பு மருந்தை பெற்றுக் கொள்வர் என்றும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் அரசு மருத்துவமனையில் இலவசமாக அரசு தடுப்பு மருந்துகளை பெறுவர் என்றும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜூன்-202108:33:10 IST Report Abuse
தமிழன் தமிழன் பகல் கொள்ளை அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
16-ஜூன்-202108:17:41 IST Report Abuse
R.RAMACHANDRAN இந்த நாட்டில் பணக்காரர்கள் இலவசங்களுக்கு அலைகிறார்கள் என்ற நிலையில் அவர்கள் அதிக விலை கொடுத்து தனியார் மருத்துவ மனையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் ஏழைகளுடன் அரசு மருத்துவ மனைகளில் போட்டிக்கு வருவார்கள்.அதனால் அரசு மருத்துவ மனைகளில் லஞ்ச ஊழல் பெருகும்.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
16-ஜூன்-202108:17:05 IST Report Abuse
VENKATASUBRAMANIAN மெடிக்கல் மாஃபியா மற்றவர்களை வளர விட மாட்டார்கள். அதற்குத்தான் pm generic மெடிசின் கொண்டுவந்தார். அதையும் காங்கிரஸ் வளர விட வில்லை. ஐந்து மடங்கு குறைவான விலையில் மருந்துகள் கிடைக்கின்றன. அதை இன்னமும் மேல் படுத்த வேண்டும். எப்படி சாராய ஆலைகள் திமுக அதிமுகவிடம் உள்ளதோ அதேபோல் மாஃபியா காங்கிரஸ் ஆதரவுடன் செயல் படுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X