மேற்கு வங்கத்தை பிரிக்கும் பா.ஜ., கோரிக்கை நிராகரிப்பு

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
கோல்கட்டா: 'மேற்கு வங்கத்தின் வடக்கு மாவட்டங்களை பிரித்து தனி யூனியன் பிரதேசத்தை உருவாக்க வேண்டும்' என பா.ஜ. - எம்.பி. கோரிக்கை வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங். அரசு அமைந்துள்ளது. மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ. - எம்.பி.யான ஜான் பர்லா ''மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களைப் பிரித்து தனி யூனியன்
west Bengal, BJP, Mamata

கோல்கட்டா: 'மேற்கு வங்கத்தின் வடக்கு மாவட்டங்களை பிரித்து தனி யூனியன் பிரதேசத்தை உருவாக்க வேண்டும்' என பா.ஜ. - எம்.பி. கோரிக்கை வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங். அரசு அமைந்துள்ளது. மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ. - எம்.பி.யான ஜான் பர்லா ''மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களைப் பிரித்து தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்'' என கூறியுள்ளார்.

இது தொடர்பாக தன் வீட்டில் சிலருடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்தப் பிரச்னை தொடர்பாக பார்லி.யில் பேச உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தன் கோரிக்கையை வலியுறுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


latest tamil news



'மேற்கு வங்கத்தை பிரிக்க பா.ஜ. எப்போதும் கோரியதில்லை. ஜான் பர்லா பேசியுள்ளது கட்சியின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாடு அல்ல'' என பா.ஜ. மாநிலத் தலைவர் திலிப் கோஷ் கூறியுள்ளார். இந்நிலையில் ''மேற்கு வங்கத்தை பிரிப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. வடக்கு மாவட்டங்களை யூனியன் பிரதேசமாக்கி டில்லியிடம் கையேந்தும் நிலை ஏற்பட விட மாட்டேன்'' என முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
16-ஜூன்-202119:58:02 IST Report Abuse
RajanRajan ரொஹிங்கியாக்களை வச்சு மே.வங்கத்தை இந்தியாவிலிருந்து பிரிக்கும் மம்மு சூழ்ச்சி இப்போ வெளிவந்துள்ளது என்பதை மக்களும் மத்திய அரசும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே வடகிழக்கு இன்னொரு கஸ்மிராக மாறுவத்தை இப்பவே தடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-ஜூன்-202114:47:44 IST Report Abuse
Pugazh V அஹமதாபாத்திலும் மாநில அரசு பஸ்ஸில் ஏறி அட்லஜ் வாவ் வரை இந்த பக்கமும், ஸ்வாமி நாராயண் கோவில் வரையும் பயணம் செய்து பாருங்கள். பிறகு பாராதீப், சட்ச் மற்றும் குசேலர் கண்ணனுக்கு அவல் தந்த ஊர் - பெயர் மறந்து விட்டது - வரை பஸ்ஸில் சென்று பாருங்கள். பஸ் பாதியில் நின்று விடும். பிறகு ஒட்டக வண்டி தான். குஜராத் தையும் ரெண்டாகப் பிரித்தாலாவது கல்வி தரம் உயருமா வாழ்வாதாரம் உயருமா என்று பார்த்து விட்டு மே. வங்கம் வரலாம??
Rate this:
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
16-ஜூன்-202116:38:29 IST Report Abuse
iconoclastசரியான கேள்வி 🤣🤣😂😂...
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
18-ஜூன்-202114:24:37 IST Report Abuse
Pannadai Pandianடேய் புகழ், நான் சுவாமிநாராயன் டெம்பிள் எல்லாம் போயிருக்கேன் குஜராத்தை ரவுண்டு நடிச்சிருக்கேன்......ரொம்ப இங்க வந்து பீலா விடாதே......வறுமை இல்லாத தொழிற் வளர்ச்சி அடைந்த மாநிலம் குஜராத். சர்க்கரை உற்பத்தியிலும் விவசாயத்திலும் சக்கை போடு போடுகிறது. குஜராத் என்ன உங்க ஊரு கேரளா மாதிரியா, தொழில்களை தொடைச்சி வைக்க ???...
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
16-ஜூன்-202114:41:56 IST Report Abuse
mindum vasantham சிறிய மாநிலங்கள் தேசத்துக்கு நல்லது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X