பொது செய்தி

இந்தியா

புது வேகத்துடன் விரைவுபடுத்தப்படும் தடுப்பூசி பணி

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி : 'புதிய, 'டெல்டா பிளஸ்' வகை தொற்றின் விளைவுகளை மத்திய அரசு கண்காணித்து வரும் நிலையில், வரும் வாரங்களில், தடுப்பூசி போடும் பணிகள், புதிய வேகத்துடன் விரைவுபடுத்தப்பட உள்ளது' என, நிடி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்து உள்ளார்.நாட்டின் கொரோனா நிலவரம் குறித்து, நிடி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், நேற்று கூறியதாவது: தொற்று பரவல் பெரும் அளவில் குறைந்துள்ளது.
Corona Vaccine, India Fights Corona, Keep India Safe

புதுடில்லி : 'புதிய, 'டெல்டா பிளஸ்' வகை தொற்றின் விளைவுகளை மத்திய அரசு கண்காணித்து வரும் நிலையில், வரும் வாரங்களில், தடுப்பூசி போடும் பணிகள், புதிய வேகத்துடன் விரைவுபடுத்தப்பட உள்ளது' என, நிடி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்து உள்ளார்.

நாட்டின் கொரோனா நிலவரம் குறித்து, நிடி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், நேற்று கூறியதாவது: தொற்று பரவல் பெரும் அளவில் குறைந்துள்ளது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அதிக வீரியத்துடன் பரவும் தொற்றை நாம் எதிர்கொண்டு வருகிறோம். எனவே, தொற்று தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.


latest tamil news



ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை துவங்கினாலும், தனி மனித இடைவெளி கடைப்பிடிப்பதை நிறுத்தக் கூடாது. அமெரிக்காவின், 'நோவாவாக்ஸ்' தடுப்பூசி, மிகவும் பாதுகாப்பானது மற்றும் அதிக செயல்திறன் உடையது என்பதை, இதுவரையிலான ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இது, நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

டெல்டா பிளஸ் வகை தொற்று, மார்ச்சிலேயே கண்டறியப்பட்டது. இது கவலைக்குரிய வகையாக உருவெடுக்கவில்லை. இந்த புதிய வகை வைரசின் விளைவுகளை, மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. வரும் வாரங்களில் தடுப்பூசி போடும் பணிகள், புதிய வேகத்துடன் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜூன்-202112:07:28 IST Report Abuse
Saikumar C Krishna எது எப்படியோ, எந்த அரசியல் வியாதி நம்மை குழப்பினாலும், தயவுசெய்து பொது மக்கள் தடுப்பூசியை தவறாமல் எடுத்து கொள்வது நல்லது. வரும் செப்டம்பர் மாதத்துக்குள 90 கோடி நபர்கள் எடுத்து கொண்டால் சிறப்பு.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-ஜூன்-202110:54:16 IST Report Abuse
Lion Drsekar "இது, நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. " சாராயம் காய்ச்சும் அதிபர்களிடம் இந்த பொறுப்பை வழங்கவேண்டாம், இவர்கள் காய்ச்சும் சாராயம் எவ்வளவு தரம் வாய்ந்தது என்பது உலகறியும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
16-ஜூன்-202110:11:05 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே பொதுமக்களாகிய நாமும் உண்மையை உணர்ந்து அரசுக்கு ஒட்திழைப்போம் கார்பொரேட் குடும்ப tv சேனல்கள் பலவாறு திரித்து இன்று குளிர் காய்ந்து கொண்டுள்ளனர் என்பதனை உணர்ந்து அவர்களை புறக்கணித்து நம்மை காத்து கொள்வோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X