பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் தொடரும் மழை; அணைகளில் நீர் மட்டம் உயர்வு

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021
Share
Advertisement
நீலகிரி: நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையுடன் பலத்த காற்று வீசுகிறது. குன்னூர், கோத்தகிரி வட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை குறைவு. இன்று காலை, 7:00 நிலவரப்படி, அவலாஞ்சியில், 136 மி.மீ., எமரால்டு, 61 மி.மீ., அப்பர்பவானி, 56 மி.மீ., மழை என, சராசரி மழை அளவு, 21.91 மி.மீ., மழை
நீலகிரி, மழை, அணைகள்

நீலகிரி: நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையுடன் பலத்த காற்று வீசுகிறது. குன்னூர், கோத்தகிரி வட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை குறைவு. இன்று காலை, 7:00 நிலவரப்படி, அவலாஞ்சியில், 136 மி.மீ., எமரால்டு, 61 மி.மீ., அப்பர்பவானி, 56 மி.மீ., மழை என, சராசரி மழை அளவு, 21.91 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

ஊட்டி - இடுஹட்டி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் ஊழியர்கள் சம்பவ பகுதிக்கு சென்று பவர்ஷா மெஷின் உதவியுடன் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர்.


அணை நிலவரம்:



மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அப்பர்பவானி, அவலாஞ்சி பகுதிகளில் பெய்து வரும் மழையால், குந்தா மின் வட்டத்திற்கு உட்பட்ட அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை அணைகளுக்கு வரும் நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து 3 அடி வரை தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது. பைக்காரா வட்டத்தில் உள்ள அணைகளிலும் ஒரு அடி வரை தண்ணீர் உயர்ந்துள்ளது.


தண்ணீர் இருப்பு விவரம்:



அணைகள் பெயர் - மொத்த அடி- தண்ணீர் இருப்பு

முக்குறுத்தி - 18 - 12

பைக்காரா - 100 - 50

சாண்டிநல்லா - 49 - 30

கிளன்மார்கன் - 33 - 22.5

மாயார் - 17 -15.5

அப்பர்பவானி - 210 - 130

பார்சன்ஸ்வேலி - 58 - 35

போர்த்திமந்து - 130 - 80

அவலாஞ்சி - 171 - 80

எமரால்டு - 184 - 85

குந்தா - 89 - 86.5

கெத்தை - 156 - 154.5


மரங்கள் விழுந்தன



நீலகிரியில், பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது.கடந்த மூன்று நாட்களாக, நீலகிரி மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில், பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த காற்று வீசுவதால், குந்தா, புதுமந்து, குன்னுார், கோத்தகிரி பகுதிகளில் மின்கம்பம் மீது மரங்கள் சாய்ந்ததால், சில இடங்களில் மின் தடை ஏற்பட்டது. சாலையில் விழுந்த மரங்களை தீயணைப்பு துறையினர் உடனுக்குடன் அகற்றினர். ஊட்டியில் கடும் குளிர் நிலவி வருகிறது.


latest tamil news




கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்,''இரண்டு நாட்களாக மழை அதிகரித்துள்ளது. 42 மண்டல குழுக்கள், பேரிடர் பகுதிகளில் கண்காணிப்பில் உள்ளனர். தாழ்வான மற்றும் வெள்ள அபாய பகுதிகளில் வசிக்கும் மக்களை தங்கவைக்க, 456 பாதுகாப்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளன,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X