அடேங்கப்பா, கடிதம் எழுதியதற்கே பாராட்டா. புல்லரிக்குது சார்...

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் துவங்கவே கூடாது என, தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமருக்கு மடல் எழுதி இருப்பதை பாராட்டுகிறோம்.- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்'அடேங்கப்பா... கடிதம் எழுதியதற்கே பாராட்டா... புல்லரிக்குது சார் உங்கள் நட்பின் ஆழத்தை பார்த்து...' என, சிரிக்க தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்
அடேங்கப்பா, கடிதம் எழுதியதற்கே பாராட்டா. புல்லரிக்குது சார்...

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் துவங்கவே கூடாது என, தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமருக்கு மடல் எழுதி இருப்பதை பாராட்டுகிறோம்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்


'அடேங்கப்பா... கடிதம் எழுதியதற்கே பாராட்டா... புல்லரிக்குது சார் உங்கள் நட்பின் ஆழத்தை பார்த்து...' என, சிரிக்க தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை.ஜாதி மறுப்பு திருமண இணையர்களுக்குவழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசு தொகையை, அ.தி.மு.க., அரசு நிறுத்தியது கண்டனத்திற்குரியது. தி.மு.க. அரசில் ஊக்கத்தொகை அளிப்பு தொடரட்டும்.- ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு கல்வி,- வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளித்து, நாட்டையே சமத்துவபுரமாக ஆக்கட்டும்!
- திராவிடர் கழக தலைவர் வீரமணி


'முந்தைய ஆட்சி பற்றி, நாளுக்கு நாள் புதிது புதிதாக குறைகளை கண்டுபிடித்து, அறிக்கை விட்டு வந்த தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், இந்த விவகாரத்தை, நான்காண்டுகளுக்கும் மேலாக எப்படி கவனிக்க தவறினர்...' என கேட்க தோன்றும் வகையில், திராவிடர் கழக தலைவர் வீரமணி அறிக்கை.சாலையோரங்களில், 'மது குடித்து வாகனங்களை ஓட்டாதீர்கள்' என்ற விளம்பரம் இருக்கும். அது இனிமேல், 'குடியுங்கள்; வாகனம் ஓட்டாதீர்கள்' என்று மாறும் நிலைக்கு வந்து விட்டது. ஆம். பீர் மதுபானம் விலையை விட, பெட்ரோல் விலை அதிகரித்து விட்டது.
- காங்., முன்னாள் எம்.பி., கீர்த்தி ஆசாத்


'நீங்கள் சொல்வதுபடி பார்த்தால், பீர் விலையை நன்கு அறிந்து வைத்துள்ள நீங்கள் பீர் பிரியரோ என எண்ண தோன்றுகிறது...' என, ஜாலியாக கூறத் தோன்றும் வகையில், காங்., முன்னாள் எம்.பி., கீர்த்தி ஆசாத் அறிக்கை.'குடித்து பழகியவர்களுக்கும், விற்று பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம்' என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், நடிகர் கமல் கூறிஉள்ளார். இல்லை. மது உற்பத்தியில், விற்பனையில் லஞ்சம் மற்றும் ஊழலில் திளைத்தவர்களுக்கே மது அத்தியாவசியம்.
- தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி


latest tamil news
'உங்கள் இருவருக்கும் இப்போதைய நிலையில், மது அவசியம் என்பது தெரிகிறது. அதாவது, மது அரசியல்...' என, சிரித்தபடி கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.இந்த கொரோனா நேரத்திலும், தெலுங்கானா மாநிலத்தில், 32 மாவட்ட கூடுதல் கலெக்டர்களுக்கு, தலா, 30 லட்சம் ரூபாய் செலவில், ஆடம்பர கியா கார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை பார்க்கும் போது, ஐதராபாதில் கியா மோட்டார்ஸ் டீலர் யார் என்ற முக்கியமான கேள்வி எழுகிறது.
- தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்


'இப்படி தான் மத்தியில் காங்., ஆட்சியிலும் நடந்ததா... விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பஸ்கள் எல்லாம் மொத்தம் மொத்தமாக வாங்கப்பட்டனவே...' என, சொல்ல தோன்றும் வகையில், தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்.மேற்கு வங்கத்தில், பா.ஜ.,வினருக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூர செயல்கள் ஒவ்வொன்றாக உச்ச நீதிமன்றத்தில் அம்பலமாகி வருகிறது. திரிணமுல் குண்டர்களால், 60 வயது பெண், தன் 6 வயது பேரன் முன் கற்பழிக்கப்பட்டதை பதிவு செய்துள்ளார். ரவீந்திரநாத் தாகூரின் மேற்கு வங்கமல்ல அது; ஜிஹாதிகளின் வங்காளமாக மாறிவிட்டது.
- தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி


'இப்படியும் கொடூரங்கள் நடக்குமா என்ற அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது, மம்தா பானர்ஜியின் வெற்றி...' என, சொல்ல துாண்டும் வகையில், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி அறிக்கை.

Advertisement


வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
16-ஜூன்-202120:26:52 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் டீம்காவுடன் சேர்ந்து கொண்டு அதிமுகவை அடிமை அரசு என்று விமர்சித்த விசிக சொந்த கட்சி சின்னத்தில் கூட நிற்க முடியவில்லை இதே தன்மானத்தை மெயின்டெயின் செய்வதற்கு அவர் எங்க கமாண்டரை புகழ்ந்தே ஆகவேண்டும்
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
16-ஜூன்-202119:38:17 IST Report Abuse
M  Ramachandran கமால் என்ன செய்வார் அவர் சினிமா உலகத்தை சேர்ந்தவர். அன்கு உள்ள பழக்க வழக்கங்கள் அவர்களுக்கு சாதாரணம். வெள்ளி உலகத்துக்கு வேண்டுமானால் தீங்காக இருக்கலாம்..
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
16-ஜூன்-202119:35:49 IST Report Abuse
M  Ramachandran பாவம் காங்கிரஸ் கட்சி என்னதான் செய்வார்கள்? மேற்கு வங்காள மணில தேர்தலில் அவர்கள் நிலைமை தெரிந்து அம்போ என்று மேற்கு வங்க காங்கிரசை காங்கிரஸ் தலைமையும் பப்புவும் கைகளிவி விட்டு மம்முத விடம் சுரேந்தர் ஆகி விட்டனர். பரிதாப மாய்விட்டது. காங்கிரசை உயிர் பிளக்க வேண்டு மென்றால் தலைமையும் அவர்கள் குடும்பமும் சிறிது ஒதுங்கி நல்ல திறமையானவர்களாக பார்த்து குலாம் நபி ஆசாத் போயன்று மனிதரை தலைவராக்கி கட்சிக்கு உயிர் கொடுக்க முயற்சிக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X