பொது செய்தி

இந்தியா

சரக்கு ரயில் வழித்தடத்தில் ராணுவ தளவாடம்: சோதனையில் வெற்றி கண்டது இந்திய ராணுவம்

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி: இந்திய பாதுகாப்பு படைகளின் தயார்நிலையை அதிகரிக்க வழிவகுக்கும் முதல் நடவடிக்கையாக, சரக்கு ரயில் வழித்தடத்தில் ராணுவ தளவாடங்களை ஏற்றிச் செல்லும் சோதனையில் இந்திய ராணுவம் வெற்றி கண்டுள்ளது.சரக்குப் போக்குவரத்தை விரைவில் மேற்கொள்ள பிரத்யேக சரக்கு வழித்தடத்தை இந்திய ரயில்வே சமீபத்தில் உருவாக்கியது. பாதுகாப்பு படைகளின் போக்குவரத்து திறனை

புதுடில்லி: இந்திய பாதுகாப்பு படைகளின் தயார்நிலையை அதிகரிக்க வழிவகுக்கும் முதல் நடவடிக்கையாக, சரக்கு ரயில் வழித்தடத்தில் ராணுவ தளவாடங்களை ஏற்றிச் செல்லும் சோதனையில் இந்திய ராணுவம் வெற்றி கண்டுள்ளது.latest tamil newsசரக்குப் போக்குவரத்தை விரைவில் மேற்கொள்ள பிரத்யேக சரக்கு வழித்தடத்தை இந்திய ரயில்வே சமீபத்தில் உருவாக்கியது. பாதுகாப்பு படைகளின் போக்குவரத்து திறனை அதிகரிக்க, பிரத்யேக சரக்கு ரயில் வழித்தட கார்ப்பரேஷன், இந்திய ரயில்வே மற்றும் இந்திய ராணுவத்துக்கு இடையேயான ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து, இந்த சரக்கு ரயில் வழித்தடத்தில், நியூ ரெவாரியிலிருந்து, நியூ புலேரா வரை ராணுவ வாகனங்கள் மற்றும் தளவாடங்களை ரயிலில் ஏற்றி இந்திய ராணுவம் பரிசோதனை மேற்கொண்டது. இது வெற்றிகரமாக நடந்து முடிந்தது.


latest tamil newsஇதன் மூலம், இந்திய பாதுகாப்பு படைகளின் போக்குவரத்தில், பிரத்யேக சரக்கு ரயில் பாதை மற்றும் அதன் துணை கட்டமைப்பின் பயன்பாட்டை அதிகரிக்க உதவும். மேலும், பாதுகாப்பு படைகளின் போக்குவரத்துக்கு உதவ சில இடங்களில் கட்டமைப்புகளை மேம்படுத்தி, ராணுவ ரயில் போக்குவரத்து சேவைகளுக்கான நெறிமுறைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

'இந்தப் பரிசோதனைகள், பாதுகாப்பு படைகளின் தயார்நிலையை அதிகரிக்க வழிவகுக்கும் முதல் நடவடிக்கை. இந்த முன்முயற்சி, திட்டமிடல் காலத்திலேயே, நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில், ராணுவத் தேவைகளும் இணைந்துள்ளதை உறுதி செய்வதற்கான நடைமுறையை ஏற்படுத்தும்' என, இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
18-ஜூன்-202113:57:20 IST Report Abuse
mathimandhiri பிரத்தியேக சரக்கு ரயில் பாதை என்பது வளர்ந்த நாடுகளில் சகஜம். அதுவே எரிபொருள் சிக்கனத்துக்கு மட்டுமல்லாது மாசுக் கட்டுப்பாடு, பெரு நகர போக்கு வரத்து சிக்கல் இவற்றின் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைந்துள்ளது .
Rate this:
Cancel
ஸ்ரீராம் - சென்னை,இந்தியா
16-ஜூன்-202123:26:11 IST Report Abuse
ஸ்ரீராம் இது ஒன்றும் புதிதல்லவே. புணே பக்கம் ரயிலில் சென்று பாருங்கள் .அடிக்கடி இவ்வாறான ராணுவ தளவாட மூவ்மென்ட் இருக்கும்.
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
16-ஜூன்-202120:09:03 IST Report Abuse
srinivasan Internal security is equally important as borders.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X