இந்தியாவில் தஞ்சம் புகுந்த மியான்மர் மாகாண முதல்வர்| Dinamalar

இந்தியாவில் தஞ்சம் புகுந்த மியான்மர் மாகாண முதல்வர்

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (11)
Share
அயிஸ்வால்: மியான்மரில், ராணுவ ஆட்சி ஏற்பட்டதை தொடர்ந்து அங்குள்ள மாகாண முதல்வர் ஒருவர், மிசோரம் மாநிலத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.அண்டை நாடான மியான்மரில் கடந்த ஆண்டு நடந்த பொது தேர்தலில் ஆங் சன் சூச்சி தலைமையிலான ஜனநாயக தேசிய லீக் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்தது.இத்தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து ஆளும் கட்சி வெற்றிபெற்றதாக ராணுவம்
Chief Minister, Myanmar State, Refuge, Mizoram

அயிஸ்வால்: மியான்மரில், ராணுவ ஆட்சி ஏற்பட்டதை தொடர்ந்து அங்குள்ள மாகாண முதல்வர் ஒருவர், மிசோரம் மாநிலத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.

அண்டை நாடான மியான்மரில் கடந்த ஆண்டு நடந்த பொது தேர்தலில் ஆங் சன் சூச்சி தலைமையிலான ஜனநாயக தேசிய லீக் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்தது.இத்தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து ஆளும் கட்சி வெற்றிபெற்றதாக ராணுவம் குற்றம்சாட்டியது. இதையடுத்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. கட்சி தலைவர் ஆங் சன் சூச்சி மற்றும் அதிபர் வின் மைன்ட் ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின் போது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பொது மக்கள் பலர் உயிரிழந்து உள்ளனர். ராணுவ ஆட்சியை தொடர்ந்து, பலர் அங்கிருந்து வெளியேறி, வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.


latest tamil newsமியான்மரின் மேற்கு பகுதியில் சின் என்ற மாகாணம் உள்ளது. இது மிசோரம் மாநிலத்தின் 6 மாவட்டங்கள், மணிப்பூர் மாநிலம் மற்றும் வங்கதேசத்தின் தென்கிழக்கு பகுதிகளில் எல்லையை பகிர்ந்து கொண்டு உள்ளது. இந்த மாகாணத்தின் முதல்வராக சலாய் லியான் லூயாய் கடந்த 2016ல் நியமிக்கப்பட்டார். இவரும், அங்கிருந்து தப்பித்து மிசோரமில் அடைக்கலம் புகுந்துள்ளார். அந்நாட்டில் ஆங்கான் சூகி கட்சி சார்பில், எம்.பி.,க்களாக பதவி வகித்த மேலும் 24 பேரும் மிசோரமில் பல்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இவர்களுடன் சேர்த்து, ராணுவ ஆட்சிக்கு பின்னர் மியான்மரில் இருந்து இதுவரை 9,247 பேர் மிசோரமில் அடைக்கலம் புகுந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

அயிஸ்வாலில் 1,633 பேரும், லாங்ட்லாயில் 1,297 பேரும், சியாஹாவில் 633, ஹ்நதியாலில் 478, லுங்கிளெயில் 167, செர்சிப் மாவட்டத்தில் 143, சய்துவாலில் 112, கொலாசிபில் 36, கவ்ஜாலில் 28 பேரும் அடைக்கலம் புகுந்து உள்ளனர். இவர்களுக்கு தன்னார் அமைப்புகள், மாணவர்கள், இளைஞர் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மூலம் உணவு, இருப்பிடம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. உள்ளூர் மக்கள் சிலரும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X