பொது செய்தி

இந்தியா

அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசி; இந்தியாவில் நிறைவடைய உள்ள பரிசோதனை

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் இந்தியாவில் நிறைவடையும் நிலையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசியை, இந்தியாவில் தயாரிப்பதற்கு புனேவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவை உள்ளடக்கிய குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு
Novavax, CovidVaccine, Trails, AdvancedStage, EfficacyData, Promising, Centre, நோவாவாக்ஸ், கோவிட், தடுப்பூசி, இந்தியா, பரிசோதனை, மத்திய அரசு

புதுடில்லி: அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் இந்தியாவில் நிறைவடையும் நிலையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசியை, இந்தியாவில் தயாரிப்பதற்கு புனேவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவை உள்ளடக்கிய குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு குறைந்தது நூறு கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. நோவாவாக்ஸ் தடுப்பூசியை மத்திய அரசு பாராட்டியதுடன், அதன் செயல்திறன் தரவுகள் நம்பிக்கை மற்றும் ஊக்கமளிக்கிறது எனத் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் இந்தியாவில் நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இது குறித்து நிடி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறுகையில், ‛கிடைத்துள்ள தரவுகளின்படி, இந்த தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானதாகவும், மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. குழந்தைகள் மீதான நோவாவாக்ஸ் தடுப்பூசி சோதனைகளையும் தொடங்கும் என்று நான் நம்புகிறேன்,' எனக்கூறினார். சீரம் நிறுவனம் தற்போது கோவிஷீல்ட் தடுப்பூசியை உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. நோவாவாக்ஸ் தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டதாகும்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
17-ஜூன்-202100:11:26 IST Report Abuse
மதுரை விருமாண்டி //குழந்தைகள் மீதான நோவாவாக்ஸ் தடுப்பூசி சோதனைகளையும் தொடங்கும் என்று நான் நம்புகிறேன்,' எனக்கூறினார்.// குடும்பம், பிள்ளைகுட்டின்னு இருக்கிறவன் நம்ம குழந்தைகளை இப்படி சோதனை எலிகளாக்க ஒப்புக்கொள்ள மாட்டான்.. பணத்துக்காக எதையும் செய்யும், முதலாளிகளின் சவுக்கித்தார் மோசடி கூட்டம் தான் இதுக்கெல்லாம் அனுமதி கொடுக்கும்..
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
16-ஜூன்-202119:17:35 IST Report Abuse
spr கொரோனா தடுப்பூசி இல்லை என்று மோடி அரசை உசுப்பேத்திவிட்டு, இப்பொழுது மக்கள் அனைவரும் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டுமென கோரிக்கை வைத்து மறைமுகமாக இந்திய மக்களை சோதனைப் பன்றிகளாக மாற்றிய பெருமை நம் எதிர்க்கட்சிக்குத் தலைமை ஏற்க அஞ்சும் ராகுல் மற்றும் நம் இந்திய நீதிபதிகளையே சேரும். இப்படி உற்பத்தி செய்யப்படுவதனை காப்புறுதி விலக்கப்பட வேண்டும் என்றும் விலை குறைவாக இருக்க வேண்டுமென்றால் ஐம்பது விழுக்காடு பலன் மட்டுமே தரும் அதுவும் ஆறு மாதங்களுக்கும் குறைவாக என்றால் அது ஆதாயமா இதனால் அந்த மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்த வேண்டியிருக்குமே இதனை ஊக்குவிக்கும் முன் சிந்திக்க வேண்டும் ஆனால் மோடி அரசுக்கு அதற்கான அவகாசத்தை ராகுல் மற்றும் நம் இந்திய நீதிபதிகள் தர மாட்டார்கள்
Rate this:
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
17-ஜூன்-202100:08:51 IST Report Abuse
மதுரை விருமாண்டி//நோவாவாக்ஸ் தடுப்பூசியை மத்திய அரசு பாராட்டியதுடன், அதன் செயல்திறன் தரவுகள் நம்பிக்கை மற்றும் ஊக்கமளிக்கிறது எனத் தெரிவித்துள்ளது.// செய்தியை நல்லா படி.. கமிஷன் வாங்கிட்டு பரிசோதனை கூட செய்யாத ஊசிக்கு சர்டிபிகேட் கொடுத்ததும், இந்தியர்களை பரிசோதனை பன்றிகளாக்கியதும், சாட்சாத் நம்ம மோடிஜி தான்.. நோயை வைத்து பணமாக்குவது தான் மோடிஜியின் மருத்துவ கொள்கை....
Rate this:
Cancel
Believe in one and only God - chennai,இந்தியா
16-ஜூன்-202113:31:30 IST Report Abuse
Believe in one and only God Poor Indian human beings are testing animal?
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
16-ஜூன்-202117:32:18 IST Report Abuse
DVRRஇவர் ஒர்ஸ்ட் பெங்காலுக்கு வரலாம் 6 மாதத்திலே நிச்சயம் எம் எல் ஏ ஆகிவிடலாம் அனால் ஒரே ஒரு நிபந்தனை ரோஹிங்கிய முஸ்லிம்களை ஆதரவு செய்ய வேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X