அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசி; இந்தியாவில் நிறைவடைய உள்ள பரிசோதனை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசி; இந்தியாவில் நிறைவடைய உள்ள பரிசோதனை

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (7)
Share
புதுடில்லி: அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் இந்தியாவில் நிறைவடையும் நிலையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசியை, இந்தியாவில் தயாரிப்பதற்கு புனேவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவை உள்ளடக்கிய குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு
Novavax, CovidVaccine, Trails, AdvancedStage, EfficacyData, Promising, Centre, நோவாவாக்ஸ், கோவிட், தடுப்பூசி, இந்தியா, பரிசோதனை, மத்திய அரசு

புதுடில்லி: அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் இந்தியாவில் நிறைவடையும் நிலையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசியை, இந்தியாவில் தயாரிப்பதற்கு புனேவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவை உள்ளடக்கிய குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு குறைந்தது நூறு கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. நோவாவாக்ஸ் தடுப்பூசியை மத்திய அரசு பாராட்டியதுடன், அதன் செயல்திறன் தரவுகள் நம்பிக்கை மற்றும் ஊக்கமளிக்கிறது எனத் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் இந்தியாவில் நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இது குறித்து நிடி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறுகையில், ‛கிடைத்துள்ள தரவுகளின்படி, இந்த தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானதாகவும், மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. குழந்தைகள் மீதான நோவாவாக்ஸ் தடுப்பூசி சோதனைகளையும் தொடங்கும் என்று நான் நம்புகிறேன்,' எனக்கூறினார். சீரம் நிறுவனம் தற்போது கோவிஷீல்ட் தடுப்பூசியை உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. நோவாவாக்ஸ் தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டதாகும்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X