மாணவியரை சீரழித்த சிவசங்கர் பாபா டில்லியில் கைது

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (56+ 73)
Share
Advertisement
புதுடில்லி: பள்ளி மாணவியரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய சிவசங்கர் பாபா டில்லியில் கைது செய்யப்பட்டார்.சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ளது 'சுஷில் ஹரி இன்டர் நேஷனல்' பள்ளி. அதை நடத்தி வரும் சிவசங்கர் பாபா என்பவர் அங்கேயே ஆசிரமும் அமைத்துள்ளார். அவர் தான் நடத்தும் பள்ளியில் படிக்கும் மாணவியரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என்ற குற்றச்சாட்டு
Sivasankar Baba, Arrested, Delhi, சிவசங்கர் பாபா, டில்லி, கைது

புதுடில்லி: பள்ளி மாணவியரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய சிவசங்கர் பாபா டில்லியில் கைது செய்யப்பட்டார்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ளது 'சுஷில் ஹரி இன்டர் நேஷனல்' பள்ளி. அதை நடத்தி வரும் சிவசங்கர் பாபா என்பவர் அங்கேயே ஆசிரமும் அமைத்துள்ளார். அவர் தான் நடத்தும் பள்ளியில் படிக்கும் மாணவியரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கேளம்பாக்கம் சாமியார் சிவசங்கர் பாபா மீது 'போக்சோ' உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.


latest tamil news


இந்நிலையில், உடல்நலக்குறைவு எனக்கூறி உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டார். இதனால், டி.எஸ்.பி. குணவர்மன் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் எஸ்.ஐ. ஸ்டீபன் ஆகியோர் டேராடூன் விரைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிவசங்கர் பாபா, சிபிசிஐடி போலீசார் வருவதை அறிந்து, அங்கிருந்து தப்பியோடினார். டில்லியின் காசியாபாத்தில் பதுங்கி இருந்த அவரை டில்லி போலீசார் கைது செய்து சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவரை, டில்லி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை தமிழகத்திற்கு அழைத்து செல்ல அனுமதி வழங்கினார்.


பள்ளியை மூட பரிந்துரை



சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியை மூட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமம் பரிந்துரை செய்துள்ளது. பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா போக்சோவில் கைதான நிலையில் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமம் பரிந்துரை செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (56+ 73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சோணகிரி - குன்றியம்,இந்தியா
20-ஜூன்-202113:18:47 IST Report Abuse
சோணகிரி பாலியல் பாதிரியார்களும் நாட்டில் ரொம்ப அதிகமாக இருக்கின்றனர்... கன்னியாஸ்திரீகள் மற்றும் பெண்கள் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும்...
Rate this:
Cancel
Muga Kannadi - chennai,இந்தியா
19-ஜூன்-202111:44:06 IST Report Abuse
Muga Kannadi நம்ப நித்திகெல்லாம் முன்னோடி. 1997 - 98 -2000 பீரியட்டீல் இவரு தான் ட்ரெண்டிங்.
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
16-ஜூன்-202121:41:36 IST Report Abuse
s t rajan கேரளாவில் பாலியல் குற்றச் சாட்டு சொன்ன க்ருத்துவப் பெண்மணியை க்ருத்துவ சபையில் இருந்து வெளியேற்றி யிருக்கிறார்கள். இதைக் கண்டிக்க எந்த த்ராவிடத்யாகியும் வாய் திறக்க வில்லையே, ஏன் ? எல்லாம் அரசியல் தான், ஓட்டு தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X