பொது செய்தி

இந்தியா

டுவிட்டருக்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை நீக்கிய மத்திய அரசு

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: டுவிட்டர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை மத்திய அரசு விலக்கிக் கொண்டுள்ளது. இதனையடுத்து, உ.பி.,யில் முஸ்லிம் நபரை தாக்கும் வீடியோவை டுவிட்டர் நிறுவனம் நீக்காததால், அந்நிறுவனத்தின் மீது உ.பி., போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.இந்தியாவில் கடந்த மே 25ம் தேதி முதல் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறை அமலுக்கு வந்தது. இந்த விதிமுறை வாட்ஸ்ஆப், பேஸ்புக்
Twitter, LoseStatus, IntermediaryP latform, India, டுவிட்டர், சட்ட பாதுகாப்பு, அந்தஸ்து, இழப்பு, இந்தியா,

புதுடில்லி: டுவிட்டர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை மத்திய அரசு விலக்கிக் கொண்டுள்ளது. இதனையடுத்து, உ.பி.,யில் முஸ்லிம் நபரை தாக்கும் வீடியோவை டுவிட்டர் நிறுவனம் நீக்காததால், அந்நிறுவனத்தின் மீது உ.பி., போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் கடந்த மே 25ம் தேதி முதல் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறை அமலுக்கு வந்தது. இந்த விதிமுறை வாட்ஸ்ஆப், பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்கள் சம்மதம் தெரிவித்தன. ஆனால், டுவிட்டர் நிறுவனம் மட்டும் விதிமுறையை ஏற்காமல் முரண்டுபிடித்தது. இதனையடுத்து, கடந்த 5ம் தேதி மத்திய அரசு, இறுதி எச்சரிக்கை விடுத்தது. இதனால், கூடுதல் கால அவகாசம் வழங்கும்படி மத்திய அரசுக்கு 7-ம் தேதி டுவிட்டர் நிறுவனம் கோரிக்கை விடுத்தது. சில நாட்கள் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் புதிய விதிகளை டுவிட்டர் நிறுவனம் இதுவரை ஏற்கவில்லை.


latest tamil news


இதனால், சமூகவலைதளங்களுக்கு இந்தியாவில் வழங்கப்பட்டு வரும் சட்டரீதியிலான பாதுகாப்பை டுவிட்டர் நிறுவனம் இழந்துள்ளது. இந்த பாதுகாப்பை இழந்ததால், ‛இடைநிலை தளம்' (Intermediary Platform) என்ற அந்தஸ்தையும் டுவிட்டர் நிறுவனம் இழக்கிறது. இதன் மூலம் பயனாளர்களால் பதிவிடப்படும் சர்ச்சைக்குரிய கருத்துகள், புகைப்படங்கள், வீடியோக்களுக்கு பயனர்கள் மட்டுமல்லாமல் இனி டுவிட்டர் நிறுவனமும் பொறுப்பாகும். இதன்மூலம் சட்டரீதியிலான நடவடிக்கைகளை டுவிட்டர் நிறுவனம் சந்திக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது.


latest tamil newsவீடியோ


இதற்கிடையே, கடந்த ஜூன் 5ம் தேதி, உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில், முஸ்லிம் நபர் ஒருவரின் தாடி அகற்றப்பட்டு வந்தே மாதரம் மற்றும் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லச் சொல்லி அவரை ஒரு கும்பல் தாக்கிய வீடியோ டுவிட்டரில் வெளியாகி இருந்தது. இது தவறான தகவல் எனக்கூறி அந்த வீடியோவை நீக்குவதற்கு டுவிட்டர் நிறுவனத்திடம் மத்திய கோரிக்கை விடுத்தது. ஆனால் அதை டுவிட்டர் நிர்வாகம் ஏற்கவில்லை. தற்போது டுவிட்டர் நிறுவனத்தின் மீதான சட்ட பாதுகாப்பை மத்திய அரசு விலக்கியதை அடுத்து, தவறான வீடியோவை நீக்கவில்லை என டுவிட்டர் நிறுவனம் மீது உ.பி., போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


மத்திய அமைச்சர் விளக்கம்


இது தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில்,டுவிட்டர் நிறுவனம், அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. அந்த நிறுவனத்திற்கு பல முறை வாய்ப்பு வழங்கப்பட்டும், இந்திய சட்டங்களை மதிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
16-ஜூன்-202121:18:37 IST Report Abuse
sankaseshan கம்யூனிஸ்ட் இந்தியா இதென்ன புது கதை ராசா இந்திய என்னைக்குமே கம்யூனிஸ்ட் நாடா இருந்ததில்லை
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
16-ஜூன்-202118:25:52 IST Report Abuse
sankaseshan The. government has done right thing in right time , media of TN will give twisted meaning. to be ignored .
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
16-ஜூன்-202116:46:40 IST Report Abuse
 N.Purushothaman சட்ட பாதுகாப்பு நீக்கப்பட்டதால் டிவீட்டர் மேலும் முரண்டு பிடித்தால் மத்திய அரசு அதை தடை செய்ய எல்லா முகாந்திரமும் இருக்கு ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X