பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.,க்களுக்கு அடைக்கலம் கொடுத்தால் சமாஜ்வாதி உடையும்: மாயாவதி எச்சரிக்கை

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
லக்னோ: 'பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.,க்களுக்கு அடைக்கலம் கொடுத்தால் சமாஜ்வாதி கட்சியில் பிளவு ஏற்பட்டு, கட்சியே உடைந்து விடும்' என, மாயாவதி எச்சரித்துள்ளார்.உத்தர பிரதேசத்தில் கடந்த சட்டசபைத் தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 12 எம்.எல்.ஏ.,க்களை அக்கட்சியில் இருந்து மாயாவதி

லக்னோ: 'பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.,க்களுக்கு அடைக்கலம் கொடுத்தால் சமாஜ்வாதி கட்சியில் பிளவு ஏற்பட்டு, கட்சியே உடைந்து விடும்' என, மாயாவதி எச்சரித்துள்ளார்.latest tamil newsஉத்தர பிரதேசத்தில் கடந்த சட்டசபைத் தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 12 எம்.எல்.ஏ.,க்களை அக்கட்சியில் இருந்து மாயாவதி நீக்கினார். இதையடுத்து மாயாவதி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தற்போது 7 மட்டுமே உள்ளனர்.


latest tamil newsஇந்நிலையில் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.,க்கள் 9 பேர் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவை லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினர். விரைவில் இவர்கள் சமாஜ்வாதியில் இணையலாம் என கூறப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில் கட்சியில் ஏற்பட்டிருக்கும் சலசலப்பு மாயாவதிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil newsஇதுகுறித்து இன்று (ஜூன் 16) மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது: பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.,க்கள் சிலர் சமாஜ்வாதி கட்சியில் இணையப்போவதாக அக்கட்சி திட்டமிட்டு தகவல் பரப்பி வருகிறது. எங்கள் கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.,க்களை நாங்கள் நீண்டகாலத்திற்கு முன்பாகவே இடைநீக்கம் செய்துள்ளோம். மாநிலங்களவைத் தேர்தலில் தலித் தலைவருக்கு எதிராக சமாஜ்வாதி கட்சி செய்த சதிக்கு உடன்பட்டு வாக்களித்ததால் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.,க்களை சமாஜ்வாதி கட்சியில் சேர்த்தால் தங்கள் கட்சி பிளவு பட்டு விடும். இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
16-ஜூன்-202121:23:46 IST Report Abuse
Vena Suna மாயாவதி அம்மா, உங்க அரசியல் மாயமாகி விடும்...ஆட்டம் போட வேண்டாம்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
16-ஜூன்-202121:14:33 IST Report Abuse
sankaseshan There were reports sometime back all opposition parties of U P going to fight Yogi unitedly. Is there any choice now ?
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
16-ஜூன்-202119:44:16 IST Report Abuse
M  Ramachandran மாயாவதி அம்மா நீங்கள் இன்னும் பழைய நினைப்பில் உள்ளீர்கள். உங்கள் கட்சி இப்பொ கலகலத்து விட்டது.ருபாய் ஆயிரம் கொடியில் யானை பொம்மையை வாங்கின காலமல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X