மம்தாவுக்கு கவர்னர் எழுதிய கடிதம் டுவிட்டரில் வெளியீடு: மே.வங்க அரசு கண்டனம்

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்குவங்க முதல்வருக்கு அம்மாநில கவர்னர் எழுதிய கடிதத்தை டுவிட்டரில் வெளியிட்டதற்காக மாநில அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் அமோக வெற்றிப் பெற்று, அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக பொறுப்பேற்றார். தேர்தலுக்கு பிறகு, அங்கு பல இடங்களில் வன்முறை நடந்தது. இது
WestBengal, Governor, LetterLeak, Government, Slams, Mamata, Shocked, Fabricated, மேற்குவங்கம், கவர்னர், கடிதம், டுவிட்டர், வெளியீடு, முதல்வர், மம்தா, கண்டனம்

கோல்கட்டா: மேற்குவங்க முதல்வருக்கு அம்மாநில கவர்னர் எழுதிய கடிதத்தை டுவிட்டரில் வெளியிட்டதற்காக மாநில அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் அமோக வெற்றிப் பெற்று, அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக பொறுப்பேற்றார். தேர்தலுக்கு பிறகு, அங்கு பல இடங்களில் வன்முறை நடந்தது. இது திட்டமிட்டு நடத்தப்ப்டட தாக்குதல் என திரிணமுல் கட்சியிரும், பா.ஜ.,வினரும் மாறி மாறி குற்றஞ்சாட்டினர்.

இதற்கிடையே அம்மாநில கவர்னர் ஜெகதீப் தன்கர், வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக கவர்னருக்கும், முதல்வர் மம்தாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.


latest tamil news


இந்த நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கவர்னர் ஜெகதீப் தன்கர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், ‛தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்காமல் முதல்வர் மவுனம் காப்பதாகவும், சுதந்திரத்திற்கு பிறகான மோசமான சம்பவங்கள் இவை எனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை' என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தை கவர்னரின் டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர். இதற்கு மேற்குவங்க அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அம்மாநில உள்துறை அமைச்சகத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ‛பொது வெளியில் ஒரு தலைபட்சமாக வெளியிடப்பட்ட கடிதம் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது. அதில் உள்ள கருத்துகள் இட்டுக்கட்டப்பட்டவை. முதல்வர் - கவர்னருக்கு இடையேயான தகவல் தொடர்பின் புனிதத்தை சீர்குலைப்பதாக உள்ளது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
17-ஜூன்-202115:05:50 IST Report Abuse
M  Ramachandran இப்போ சவுதி அரேபியா பழைய நாடு அல்ல. எல்லாம் மோடி பாக்கம் சாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
17-ஜூன்-202110:08:32 IST Report Abuse
sankaseshan ஷாஹுல் சவுதியில் இருந்து கொண்டு பிரிவினை பேசாதே ஒட்டகம் மேய்க்கிற உன் வேலையே மட்டும் பார் .
Rate this:
Cancel
Shahul Hameed Mohamed Ali - Dammam,சவுதி அரேபியா
17-ஜூன்-202107:21:52 IST Report Abuse
Shahul Hameed Mohamed Ali சங்கிகள் இருக்கும்வரை இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் தான் போவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X