பொது செய்தி

தமிழ்நாடு

2 நாட்கள் கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:தென் மேற்கு பருவக்காற்றின் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தென்காசி) மற்றும் குமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான
கோவை, நீலகிரி, மழை

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

தென் மேற்கு பருவக்காற்றின் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தென்காசி) மற்றும் குமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.


ஜூன் 17

நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய(திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சேலம் ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும்.


ஜூன் 18

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய(நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.


ஜூன்19,20

கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்பச்சலனத்தின் காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.


latest tamil news


சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில்
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 14 செ.மீ.,
தேனி மாவட்டம் பெரியாறு, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் தலா 11 செ.மீ.,
கோவை மாவட்டம் சின்கோனா, நீலகிரி மாவட்டம் எமரால்ட்டில் தலா 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை



வங்கக்கடல் பகுதிகள்



ஜூன் 16

மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்


ஜூன் 16, 17


மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்
மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.


ஜூன் 17


மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


அரபிக்கடல் பகுதிகள்



ஜூன் 16 முதல் 18 வரை


கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.


ஜூன் 16 முதல் 20 வரை


தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.


ஜூன் 16 முதல் 19 வரை


மஹாராஷ்டிரா மற்றும் கோவா கடலோர பகுதிகளில் சூறாவளி மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறுவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் புவியரசன் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
16-ஜூன்-202119:55:46 IST Report Abuse
M  Ramachandran பரவாயில்லை இயற்கையாவது கோவையின் தோற்று சீற்றத்தை குறைக்க உதவ எண்ணம் கொண்டு மழை ம்,மக்களுக்கு உதவி கரம் நீட்டுகிறது.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
16-ஜூன்-202117:18:33 IST Report Abuse
Nagarajan D நமது வானிலை துறை சொல்லி இதுவரை மழை வந்ததே இல்லை... இவர்கள் சும்மா இருந்தாலே போதும்....இதிலே இவனுங்களுக்கு அரசாங்க சம்பளம் வேற....தூறல் இருக்கும் போது மழை வரும் என இவர்கள் சொன்னால் அத்தோடு தூறலும் நின்றுவிடுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X