கால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த கோகோ கோலா நிறுவனத்தின் மதிப்பு

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (47)
Share
Advertisement
லிஸ்பன்: பத்திரிகையாளர் சந்திப்பின்போது ‛தண்ணீர் குடிங்க' என கோகோ கோலா பாட்டிலை ஒதுக்கிவைத்த பிரபல கால்பந்து வீரரின் செயலால், அந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சரிந்தது.ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடர் தற்போது நடக்கிறது. இத்தொடரின் போர்ச்சுகல் போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன்பாக போர்ச்சுகல் அணியின்
DrinkWater, CristianoRonaldo, CocaCola, கோகோ கோலா, ரொனால்டோ, தண்ணீர்

லிஸ்பன்: பத்திரிகையாளர் சந்திப்பின்போது ‛தண்ணீர் குடிங்க' என கோகோ கோலா பாட்டிலை ஒதுக்கிவைத்த பிரபல கால்பந்து வீரரின் செயலால், அந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சரிந்தது.

ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடர் தற்போது நடக்கிறது. இத்தொடரின் போர்ச்சுகல் போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன்பாக போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது அவரது மேஜையின் மீது இரண்டு கோகோ கோலா குளிர்பான பாட்டில்கள் இருந்ததை கவனித்த ரொனால்டோ, அவற்றை அகற்றிவிட்டு, தண்ணீர் பாட்டிலை எடுத்து வைத்தார். கூடவே, ‛அகுவா' (போர்ச்சுக்கீசியத்தில் தண்ணீர் என்று பொருள்) எனக்கூறி குளிர்பானங்களுக்கு பதிலாக தண்ணீரை குடிக்குமாறு சைகையில் குறிப்பிட்டார்.


latest tamil news


இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. கோகோ கோலா குளிர்பானத்தை பிரபல கால்பந்து வீரர் ஒருவர் அகற்றியதால், இது அந்த குளிர்பான நிறுவனத்திற்கு எதிரான விளம்பரமாக உருவெடுத்தது. இதன் எதிரொலியாக, கோகோ கோலா நிறுவனம் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.29,300 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Saravanan - Ajman,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜூன்-202109:17:45 IST Report Abuse
S Saravanan என்று இயற்க்கை அல்லாத பொருள்களின் உண்மை நிலையை, விளைவுகளை பாமர மனிதன் அறிக்கின்றானோ அன்று இந்த இயற்க்கை அல்லாத பொருள்கள் உலக சந்தையில் இருக்காது
Rate this:
Cancel
Yesappa - Bangalore,இந்தியா
16-ஜூன்-202122:14:42 IST Report Abuse
Yesappa நம்ம சினிமா ஸ்டார் ஒருத்தர் பெப்சி ஏ வச்சி டான்ஸ் ஆதி கல்லா காட்டினார். ரொனால்டோ பிழைக்க தெரிய வில்லை. நம்ம மாஸ்டர் கிட்ட கேட்டுக்கணும் .
Rate this:
Cancel
GK -  ( Posted via: Dinamalar Android App )
16-ஜூன்-202120:52:43 IST Report Abuse
GK remembering Vikram in I movie
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X