கோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 இளைஞர்களுக்கு செவிலியர் பயிற்சி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 இளைஞர்களுக்கு செவிலியர் பயிற்சி

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (6)
Share
புதுடில்லி: கோவிட் பெருந்தொற்றின் 3வது அலையை சமாளிக்க 5,000 இளைஞர்களுக்கு மருத்துவ உதவியாளர்களுக்கான பயிற்சியை அளிக்க உள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாட்டில் கோவிட் பெருந்தொற்றின் 3வது அலை தாக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து 3வது அலையை சமாளிக்க வசதியாக, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு

புதுடில்லி: கோவிட் பெருந்தொற்றின் 3வது அலையை சமாளிக்க 5,000 இளைஞர்களுக்கு மருத்துவ உதவியாளர்களுக்கான பயிற்சியை அளிக்க உள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.



latest tamil news



நாட்டில் கோவிட் பெருந்தொற்றின் 3வது அலை தாக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து 3வது அலையை சமாளிக்க வசதியாக, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உதவும் வகையில், 5,000 இளைஞர்களுக்கு மருத்துவ உதவியாளர்களுக்கான பயிற்சியை அளிக்க டில்லி அரசு முடிவு செய்துள்ளது.ஜூன் 28ம் தேதி முதல் இந்த பயிற்சி தொடங்க இருப்பதாகவும், முதல் கட்டமாக 500 இளைஞர்களுக்கு இரண்டு வாரங்கள் செவிலியர் பணி மற்றும் உயிர் காக்கும் பயிற்சிகள் அளிக்கப்படவிருப்பதாகவும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


latest tamil news



'பயிற்சியை மேற்கொள்ள விரும்பும் இளைஞர்கள், பிளஸ்2 வகுப்பு முடித்திருக்க வேண்டும்; 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். பணி நாள்களுக்கு ஏற்ப அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். ஜூன் 17ம் தேதி முதல் இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்படும்' என, டில்லி அரசு அறிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X