பொது செய்தி

இந்தியா

கோவிஷீல்டு இரு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்க காரணம் இதுதான்: மத்திய அரசு விளக்கம்

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: 'அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தான் கோவிஷீல்டு இரு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டது' என, கோவிட்19 பணிக்குழு தலைவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.இந்தியாவின் கோவிட்19 தடுப்பூசித் திட்டம் குறித்து, தடுப்பூசிகளுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கோவிட்19 பணிக்குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா

புதுடில்லி: 'அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தான் கோவிஷீல்டு இரு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டது' என, கோவிட்19 பணிக்குழு தலைவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கோவிட்19 தடுப்பூசித் திட்டம் குறித்து, தடுப்பூசிகளுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கோவிட்19 பணிக்குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளதாவது:


latest tamil news
கடந்த ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத் துறை வெளியிட்ட தரவுகளின்படி, அடினோவெக்டர் வகை கோவிட் தடுப்பூசிகளின் இரு டோஸ்களுக்கான இடைவெளி 12 வாரங்களாக இருக்கும் போது அவற்றின் செயல்திறன் 65% - 88% வரை வேறுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஆல்பா வகைத் தொற்றிலிருந்து அவர்கள் மீண்டு வருவதற்கு இதுவே அடிப்படையாக அமைந்தது.

இந்த 12 வாரங்கள் இடைவெளியை அவர்கள் பின்பற்றியதால் இங்கிலாந்தினால் மீள முடிந்தது. இடைவெளி அதிகரிக்கும்போது அடினோவெக்டர் தடுப்பூசிகள் சிறப்பாக செயல்படுவதற்கான அடிப்படை அறிவியல் காரணங்கள் இருப்பதால் இது ஒரு சிறந்த யோசனையாக இருக்கும் என்று நாங்களும் கருதினோம். எனவே, கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை 4 - 6 வாரங்களில் இருந்து 12 - 16 வாரங்களாக அதிகரிக்க மே 13ம் தேதி முடிவு செய்யப்பட்டது.latest tamil news
அனைவராலும் சரியாக 12 வாரங்களில் மீண்டும் வர இயலாததால், இதன் மூலம் நெகிழ்வுத்தன்மையும் அளிக்கப்படுகிறது. அறிவியல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.அறிவியலின் அடிப்படையில் முடிவுகள் மேற்கொள்ளப்படும் வகையில் திறந்த மற்றும் வெளிப்படைத் தன்மையிலான முறையை நாம் கொண்டுள்ளோம். கோவிட் பணிக்குழு அந்த முடிவை எடுத்தபோது, எதிர்ப்புக் குரல்கள் எதுவுமே இல்லை.


latest tamil news
இந்த விஷயம் குறித்து பிறகு தடுப்பூசிகளுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவில் ஒளிவு மறைவில்லாமல் விவாதித்தபோது அங்கும் எதிர்ப்புகள் எழவில்லை. தடுப்பூசிகளுக்கான இடைவெளியை 12 - 16 வாரங்களாக மாற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
முன்னதாக நான்கு வார இடைவெளி என்ற முடிவு, அப்போது கைவசம் இருந்த சோதனைத் தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

டாக்டர் என்.கே.அரோரா இந்த அறிக்கையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று (ஜூன் 16) வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
17-ஜூன்-202105:41:03 IST Report Abuse
spr ""முதல் தடுப்பூசி நான் மார்ச் 9 போட்டுக்கொண்டேன். போட்ட சில நாட்களில் வைரஸ் தாக்கம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். ஒரு வாரத்தில் நான் நல்ல குணமாகி வீட்டிற்கு வந்துவிட்டேன். இப்பொழுது ஒரு முறை வைரஸால் தாக்கப்பட்ட நான், எவ்வளவு நாட்கள் இடைவெளியிட்டு இரண்டாவது தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவேண்டும்?" இதற்கு பதில்m இந்தத் தொற்று உடலில் நுழைந்து இருவாரம் பொறுத்தே வெளிப்படத் தொடங்கும் ஊசி போடுமுன் கொரோனா இருக்கிறதா என்று சோதனை செய்து ஊசி போடுவதில்லை. மேலும் ஊசி போட்டபின் குறைந்தது இரு வாரங்கள் பொறுத்துத்தான் அதன் காப்புத்தன்மை உருவாகிறது எனவே தடுப்பூசி போடுமுன் கொரோனா தொற்று இருந்தால் அது ஊசி போட்டபின்னும் தாக்கும் ஆனால் கட்டுப்படும் பின் கொரோனா கட்டுப்படும் இதுதான் பலரின் அனுபவம் அதற்குப் பின்னரே அடுத்த ஊசி போடப்பட வேண்டும் எனவே கொரோனா தாக்கம் குறைந்து இரு வாரம் போன பின்னரே அடுத்த ஊசி போட்டுக் கொள்ள வேண்டும் மேலை நாடுகளில் கூட 4 வாரம் என்று இருந்தது இப்பொழுது உடலின் இயற்கையான தடுப்பு சக்தியை அதிகரிக்க 12- 16 வாரம் என மாற்றப்பட்டுள்ளது இங்கு நினைவில் வைக்க வேண்டிய செய்தி இந்த தடுப்பூசி மருந்துகள் நம் உடலின் எதிர்ப்பு சக்தியை இயல்பாக அதிகரிக்கும் செயலே நிரந்தரக் குணம் தரும் ஒன்றல்ல இறுதியில் நம் உடலின் எதிர்ப்பு சக்தி மட்டுமே கொரோனா வராமல், தடுக்க, வந்தால் குணப்படுத்த தக்க தீர்வு அதுவரை நம் உடம்பு கொரோனாவுடன் போராட பிறருக்குப் பரவாமல் தடுக்க ஏற்ற முகக் கவசம், மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்குப் பின் முகக்கவசத்தை மாற்றுவது, (தொற்று இருக்கோ இல்லையோ ) நம் எச்சில் சளி இவற்றை பாதுகாப்பாகக் கையாள்வது சமுதாய இடைவெளி நிஹாம்மைப் பாதுகாத்துக் கொள்ள நம் வாயை மூக்கைத் தொடுமுன்பாகக் கைகழுவது மற்றும் பாதுகாப்பான எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் உணவு உண்ணுவது என அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் கைவிடக் கூடாது. விரும்பினால் அடுத்த ஊசி போட்டுக் கொள்ளும் முன் உங்களது கொரோனா தொற்று குணமாகிவிட்டதா எனப் பரிசோதித்துக் கொள்ளவும். இயற்கையாக உருவான ஒன்றானால் தானே காலபோக்கில் இயற்கையே கொரோனாவை அழித்துவிடும் ஆனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று என அறிஞர்கள் சொல்வதால் இதற்கு அழிவில்லை இனி இது ஒரு தொடர்கதைதான்.எப்படி ஊழலுடனும் லஞ்சத்துடனும் வாழப் பழகிக் கொண்டோமோ அது போல இதனுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். இதனைத் தொடங்கி வைத்த வல்லரசுகள் மருந்தை விற்று வருமானம் ஈட்டும்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
16-ஜூன்-202118:13:34 IST Report Abuse
Ramesh Sargam கோவிஷீல்டு இரு டோஸ்களுக்கான இடைவெளி 84 நாட்கள் என்று கூறுகிறீர்கள். நல்லது. என்னுடைய கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. என் கேள்வி: "முதல் தடுப்பூசி நான் மார்ச் 9 போட்டுக்கொண்டேன். போட்ட சில நாட்களில் வைரஸ் தாக்கம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். ஒரு வாரத்தில் நான் நல்ல குணமாகி வீட்டிற்கு வந்துவிட்டேன். இப்பொழுது ஒரு முறை வைரஸால் தாக்கப்பட்ட நான், எவ்வளவு நாட்கள் இடைவெளியிட்டு இரண்டாவது தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவேண்டும்?
Rate this:
Layman - Chennai,இந்தியா
16-ஜூன்-202119:55:08 IST Report Abuse
Laymanஒரு மாதம் கழித்து போடலாம்...
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
16-ஜூன்-202120:41:32 IST Report Abuse
கொக்கி குமாரு தவறு, மூன்று மாதங்கள் கழித்துதான் போடவேண்டும். வெளிநாடுகளில் அதுதான் நடைமுறை....
Rate this:
குறையொன்றுமில்லை - குன்றக்குடி,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜூன்-202122:08:54 IST Report Abuse
குறையொன்றுமில்லைரமேஷ் , இது ஒரு டவுட்டா ? முனு மாசம் னு போஸ்ட்டர் அடிச்சு ஓட்டாத குறைய சொல்றவுகளே அது இன்னும் புரியலையா ராசா ?...
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஜூன்-202123:36:34 IST Report Abuse
தமிழவேல் 3 மாதம்தான் சரி. இங்கே ஒரு டாக்டர் எத்தியோப்பியாவிலேருந்து வருவாரு. அவரும் இதைத்தான் சொல்லுவாரு பாருங்களேன்....
Rate this:
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
16-ஜூன்-202123:58:50 IST Report Abuse
மதுரை விருமாண்டிகக்கி, வெளிநாடுன்னா ? எங்கே, உக்கிரபிரதேசமா ?? மருந்தை ஏற்றுமதி பண்ணி கமிஷன் பாக்குறார்.. நோயை பரப்புனா இன்னும் துட்டு.. அதான். எந்த அளவு இடைவெளி அதிகமாகுதோ அந்த அளவு வைரஸ் உக்கிரமைடைய வாய்ப்பு அதிகம். அடுத்த அலை இன்னும் உக்கிரமா இருக்கும். தனியார் ஆஸ்பத்திரி, மருந்து கம்பெனி எல்லாம் கொழுக்கும்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X