கோவிஷீல்டு இரு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்க காரணம் இதுதான்: மத்திய அரசு விளக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கோவிஷீல்டு இரு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்க காரணம் இதுதான்: மத்திய அரசு விளக்கம்

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (9)
Share
புதுடில்லி: 'அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தான் கோவிஷீல்டு இரு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டது' என, கோவிட்19 பணிக்குழு தலைவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.இந்தியாவின் கோவிட்19 தடுப்பூசித் திட்டம் குறித்து, தடுப்பூசிகளுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கோவிட்19 பணிக்குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா

புதுடில்லி: 'அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தான் கோவிஷீல்டு இரு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டது' என, கோவிட்19 பணிக்குழு தலைவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கோவிட்19 தடுப்பூசித் திட்டம் குறித்து, தடுப்பூசிகளுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கோவிட்19 பணிக்குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளதாவது:


latest tamil news




கடந்த ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத் துறை வெளியிட்ட தரவுகளின்படி, அடினோவெக்டர் வகை கோவிட் தடுப்பூசிகளின் இரு டோஸ்களுக்கான இடைவெளி 12 வாரங்களாக இருக்கும் போது அவற்றின் செயல்திறன் 65% - 88% வரை வேறுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஆல்பா வகைத் தொற்றிலிருந்து அவர்கள் மீண்டு வருவதற்கு இதுவே அடிப்படையாக அமைந்தது.

இந்த 12 வாரங்கள் இடைவெளியை அவர்கள் பின்பற்றியதால் இங்கிலாந்தினால் மீள முடிந்தது. இடைவெளி அதிகரிக்கும்போது அடினோவெக்டர் தடுப்பூசிகள் சிறப்பாக செயல்படுவதற்கான அடிப்படை அறிவியல் காரணங்கள் இருப்பதால் இது ஒரு சிறந்த யோசனையாக இருக்கும் என்று நாங்களும் கருதினோம். எனவே, கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை 4 - 6 வாரங்களில் இருந்து 12 - 16 வாரங்களாக அதிகரிக்க மே 13ம் தேதி முடிவு செய்யப்பட்டது.



latest tamil news




அனைவராலும் சரியாக 12 வாரங்களில் மீண்டும் வர இயலாததால், இதன் மூலம் நெகிழ்வுத்தன்மையும் அளிக்கப்படுகிறது. அறிவியல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.அறிவியலின் அடிப்படையில் முடிவுகள் மேற்கொள்ளப்படும் வகையில் திறந்த மற்றும் வெளிப்படைத் தன்மையிலான முறையை நாம் கொண்டுள்ளோம். கோவிட் பணிக்குழு அந்த முடிவை எடுத்தபோது, எதிர்ப்புக் குரல்கள் எதுவுமே இல்லை.


latest tamil news




இந்த விஷயம் குறித்து பிறகு தடுப்பூசிகளுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவில் ஒளிவு மறைவில்லாமல் விவாதித்தபோது அங்கும் எதிர்ப்புகள் எழவில்லை. தடுப்பூசிகளுக்கான இடைவெளியை 12 - 16 வாரங்களாக மாற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
முன்னதாக நான்கு வார இடைவெளி என்ற முடிவு, அப்போது கைவசம் இருந்த சோதனைத் தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

டாக்டர் என்.கே.அரோரா இந்த அறிக்கையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று (ஜூன் 16) வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X