பொது செய்தி

தமிழ்நாடு

ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு தொகை திட்டம்: முதல்வர் துவக்கி வைத்தார்

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
சென்னை: கோவிட் காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்புத்தொகை செலுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.கோவிட் காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாத்திட, அந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்புத்தொகை வழங்கப்படும். தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தையோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு ரூ.3 லட்சம் வைப்பு
ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு தொகை திட்டம்: முதல்வர் துவக்கி வைத்தார்

சென்னை: கோவிட் காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்புத்தொகை செலுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.


latest tamil news




கோவிட் காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாத்திட, அந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்புத்தொகை வழங்கப்படும். தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தையோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு ரூ.3 லட்சம் வைப்பு தொகையாக வைக்கப்பட்டு, அவர்களுக்கு 18 வயது நிறைவு பெறும் போது அந்த தொகை குழந்தைக்கு வட்டியோடு வழங்கப்படும்.


latest tamil news


Advertisement



பெற்றோரை இழந்து உறவினர் அல்லது பாதுகாவலரின் ஆதரவில் வாழும் குழந்தைகளின் பராமரிப்பு செலவாக மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.


latest tamil news




இந்நிலையில், கோவிட்டால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி செலுத்தும் திட்டத்தை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். முதல்கட்டமாக, பெற்றோரை இழந்த 5 குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா ரூ.5 லட்சத்தை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பீடு செய்தமைக்கான சான்றிதழ்களை அக்குழந்தைகளின் பாதுகாவலர்களிடம் வழங்கினார்.


latest tamil news




மேலும், பெற்றோரில் ஒருவரை இழந்து தவிக்கும் 5 குழந்தைகளின் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரண தொகையாக தலா ரூ.3 லட்சம் காசோலைகளை வழங்கினார்.


latest tamil news




latest tamil news




latest tamil news



Advertisement


வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
17-ஜூன்-202107:21:50 IST Report Abuse
மதுரை விருமாண்டி திஸ் நியூஸ் இஸ் ஸ்பான்சர்ட் பை "ஜெலுசில் மற்றும் பர்னால்".. குடித்தால் குளுகுளு..
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
17-ஜூன்-202106:36:23 IST Report Abuse
Elango நல்ல திட்டம். மத்திய அரசு அறிவித்த பணமும் இந்த குழந்தைகளை ஒழுங்காக சென்று சேர நடவடிக்கை. எடுக்கவும்....
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
17-ஜூன்-202106:00:19 IST Report Abuse
 N.Purushothaman பத்து லட்சம் கொடுக்கிற பிரதமர் அவர்கள் கொரோனா காலம் என்பதால் யாரையும் வர சொல்லி உக்கார வச்சி கொடுத்து விளம்பரம் தேடிக்கல ...விடியல் வந்துடுச்சி ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X