பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் முதலீடு: உலக நாடுகளுக்கு பிரதமர் அழைப்பு

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: திறமை, சந்தை, மூலதனம் உள்ளிட்ட தூண்களின் அடிப்படையில், இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகள் முன்வர வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.'விவாடெக்'தொழில்நுட்ப மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் பேசியதாவது: இந்த மாநாடானது, பிரான்சின் தொழில்நுட்ப கொள்கையை விளக்குகிறது. பல விவகாரங்களில் இந்தியாவும், பிரான்சும் இணைந்து செயல்படுகிறது.
இந்தியாவில் முதலீடு: உலக நாடுகளுக்கு பிரதமர் அழைப்பு

புதுடில்லி: திறமை, சந்தை, மூலதனம் உள்ளிட்ட தூண்களின் அடிப்படையில், இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகள் முன்வர வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

'விவாடெக்'தொழில்நுட்ப மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் பேசியதாவது: இந்த மாநாடானது, பிரான்சின் தொழில்நுட்ப கொள்கையை விளக்குகிறது. பல விவகாரங்களில் இந்தியாவும், பிரான்சும் இணைந்து செயல்படுகிறது. அதில், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் ஆகியவை ஒத்துழைப்பிற்கான முக்கிய துறையாக மாறி வருகிறது. இந்த நேரத்தில் இது முக்கியமானது. கொரோனா பெருந்தொற்று காலத்தில், அனைத்து நாடுகளும் இழப்புகளை சந்தித்து உள்ளன. எதிர்காலம் பற்றிய அச்சத்தில் உள்ளன. நமது வழக்கமான நடைமுறைகளுக்கு கோவிட் பெரிய சோதனையை ஏற்படுத்தி உள்ளது. தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட் அப்களில் இந்தியாவின் முன்னேற்றங்கள் நன்கு அறியப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களின் புகலிடமாக இந்தியா உள்ளது. சில நாட்களாக பல நிறுவனங்கள் இங்கு தோன்றி உள்ளது. முதலீட்டாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு தேவையான உதவிகளை இந்தியா வழங்கி உள்ளது.


latest tamil news




உலகம் முழுவதும் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் சிறந்து விளங்குகின்றனர். இந்தியாவில் டேட்டா நுகர்வு அதிகமாக உள்ளது. பெருந்தொற்று காலத்தில் தொழில்நுட்பம் நமக்கு மிகவும் உதவியது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை விரைவில் கண்டறிய ஆரோக்கிய சேது செயலி உதவியது. ஏழைகளுக்கு நிதியுதவி அளிப்பதில் ஆதார் பெரிதும் பயன்பட்டது. கோவிட்டிற்கு எதிராக இரண்டு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இன்னும் சில தடுப்பூசிகள் விரைவில் வர உள்ளன.திறமை, சந்தை, மூலதனம், சூழல் அமைப்பு மற்றும் திறந்த கலாசாரம் ஆகிய 5 தூண்களின் அடிப்படையில் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
16-ஜூன்-202121:46:43 IST Report Abuse
BASKAR TETCHANA இந்தியாவில் முதலீடு செய்யுங்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் வேண்டாம். தற்போது நடப்பது பத்து ஆண்டுகள் பசியில் கிடந்த ஆட்சி. உங்கள் முதலீடு அம்போ ஆகிவிடும் உஷார்.
Rate this:
Cancel
16-ஜூன்-202121:12:42 IST Report Abuse
ஆப்பு பரிட்சை கிடையாது. ஃப்ரான்சுலேருந்து பணத்தை கொட்டி தொழில். துவக்குனா சமூகநீதின்னு உள்ளூர் குருமாக்கள் வேலை கேட்பாங்க. போதாக்குறைக்கு அரைகுறையா இந்திலே படிச்சு பாஸ்பண்ணிட்டு பீடா வாய்ன்க வருவாங்க. நல்லாப் படிச்சு பாஸ் பண்ணவன் வேலை வெட்டி இல்லாம நிப்பான். இல்லேன்னா அமெரிக்கா போயிடுவான்.
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
16-ஜூன்-202121:04:58 IST Report Abuse
Sanny இந்திய தொழிலார்களுக்கு கணிசமான சம்பளம், வேலை பாதுகாப்பு நிதி (Provident Fund), மருத்துவக்காப்பு நிதி சேமலாப நிதி எல்லாம் மேல்நாடுகளில் இருப்பதுபோல வரையறுக்கப்பட்ட முறையில் தொழிலார்களுக்கு கொடுக்கப்படவேண்டும், சும்மா அடிமாட்டுவிலைக்கு போல சம்பளம் இருக்கக்கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X