பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 10,448 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 10,446 பேரும் பிற மாநிலத்தவர் 2 பேரையும் சேர்த்து 10,448 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 273 பேர் உயிரிழந்து உள்ளனர். 21,058 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 26நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 35 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.இது தொடர்பாக

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 10,446 பேரும் பிற மாநிலத்தவர் 2 பேரையும் சேர்த்து 10,448 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 273 பேர் உயிரிழந்து உள்ளனர். 21,058 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 26நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 35 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.latest tamil newsஇது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 71,085மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 10,448பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,88,746 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,04,80,340 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 5,849 பேர் ஆண்கள், 4,599 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 13,98,206 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 9,90,502 ஆகவும் அதிகரித்து உள்ளது. 21,058 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,44,073 ஆக உயர்ந்துள்ளது.

270 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 106 பேர் தனியார் மருத்துவமனையிலும், 164 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30,338 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்latest tamil newslatest tamil news


Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridharan - Coimbatore,இந்தியா
16-ஜூன்-202121:46:27 IST Report Abuse
Sridharan கிராம சபை கூட்டம் கூட்டி கொரோனாவை கிராமங்களுக்கு கொண்டு சென்றது யார்? ஊரடங்கு என்றால் என்ன என்று கட்சி காரனுக்கும் தெரியல. பொது மக்களுக்கும் புரியல. இங்கு கோவையில் உண்மையில் முழு ஊரடங்குதானா என்பது கேள்வி குறியாகவே உள்ளது. காவல் துறையை பார்த்தால் தான் ரொம்பவும் பாவமாக உள்ளது. சாலையில் அதனை வாகனங்கள். காரணமே இல்லாமல் வெளியில் சுத்தும் கூட்டம் அதிகமாகவே உள்ளது. நகர் பகுதியில் சற்றே கொரோனா குறைந்திருந்தாலும் கிராம பகுதிகளில் அதிகம்.
Rate this:
john - MADURAI,இந்தியா
17-ஜூன்-202108:20:40 IST Report Abuse
johnநீங்கள் உண்மை தகவல் தரலாமே . கடந்த ஆட்சியில் இருந்தவர்களுக்கு கட்டயம் தகவல் தெரியும் . விசாரியுங்கள்...
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
16-ஜூன்-202121:43:12 IST Report Abuse
BASKAR TETCHANA எதோ கடந்த ஆட்சியில் சில பல காரியங்களை கோரோனோவுக்கு செய்தார்கள். இவர் வந்து ஒரு மாதத்தில் குறைந்து விட்டதாம் பத்தாயிரமாக. இந்த மா.சு. வே எப்போதும் எண்ணிக்கையை குறைத்து தான் காண்பிப்பார். அதிலும் இதுவும் ஒன்று. தினமும் வரும் கோரோனோ அறிக்கை பொய் பொய் பொய் .
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
16-ஜூன்-202120:29:44 IST Report Abuse
Ramesh Sargam கடந்த சில நாட்களாக இதுபோன்ற புள்ளிவிவரங்கள் உண்மையல்ல என்று பல விதமான செய்திகள் பரவி வருகின்றன. அது உண்மையா அல்லது பொய்யா அல்ல நாட்டின் பெயரை குலைக்க ஒரு சிலர் செய்யும் சதியா??
Rate this:
ஷண்முக பிரியன் - AMBATTUR,இந்தியா
16-ஜூன்-202121:05:39 IST Report Abuse
ஷண்முக பிரியன் எது BANGALORE MAHA RAsTRA எல்லாமா என்ன ஏன் எனில் KARANATAKA 60000 என்று வந்தது மகா 80000 என்று வந்தது இப்போ எப்படி குறைந்தது அதே நிலை தான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X