பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூன் 16, 2021
Share
Advertisement
ஜூன் 17, 1921திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில், 1921, ஜூன் 17ம் தேதி பிறந்தவர், மீ.ப.சோமசுந்தரம்.சென்னை பல்கலையில், தமிழில் வித்வான் பட்டம் பெற்றார். அகில இந்திய வானொலியில், 40 ஆண்டு காலம் பணியாற்றினார். 'கல்கி' இதழின் ஆசிரியராக, இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். 'நண்பன்' என்ற மாத இதழை துவக்கினார்.தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதத்தில் புலமை பெற்றிருந்தார். சர்வதேச

இதே நாளில் அன்று


ஜூன் 17, 1921



திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில், 1921, ஜூன் 17ம் தேதி பிறந்தவர், மீ.ப.சோமசுந்தரம்.சென்னை பல்கலையில், தமிழில் வித்வான் பட்டம் பெற்றார். அகில இந்திய வானொலியில், 40 ஆண்டு காலம் பணியாற்றினார். 'கல்கி' இதழின் ஆசிரியராக, இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். 'நண்பன்' என்ற மாத இதழை துவக்கினார்.தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதத்தில் புலமை பெற்றிருந்தார். சர்வதேச இலக்கிய அமைப்புகளில் உரையாற்றி, தமிழின் பெருமைகளை பரப்பினார்.சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, பயணம் மற்றும் இசை ஆய்வு கட்டுரை என, இலக்கியத்தின் அனைத்து தளங்களிலும் முத்திரை பதித்தார்.இவரது நாடகங்கள் டி.கே.எஸ்., குழுவினரால் மேடையேற்றப்பட்டு பிரபலமடைந்தன.சித்தர் பாடல்கள், இசை ஆகியவற்றில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். சாகித்ய அகாடமி உட்பட, ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். பண் ஆராய்ச்சி மையத்தின் கவுரவ இயக்குனராகவும் செயல்பட்டார். 1999, ஜன., 15ம் தேதி, தன் 78வது வயதில் காலமானார்.பல்கலை வித்தகர் மீ.ப.சோமசுந்தரம் பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X