தடுப்பூசியின் கால அவகாசத்தை குறைக்க விவாதம்

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி :'கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கு இடையிலான கால அவகாசத்தை, மீண்டும் 4 - 8 வாரங்களாக குறைப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் போடும் பணி, நாடு முழுதும் கடந்த ஜனவரியில் துவங்கியது.நிர்ணயம்கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கு இடையிலான கால
 தடுப்பூசி, கால அவகாசம்,குறைக்க விவாதம்

புதுடில்லி :'கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கு இடையிலான கால அவகாசத்தை, மீண்டும் 4 - 8 வாரங்களாக குறைப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் போடும் பணி, நாடு முழுதும் கடந்த ஜனவரியில் துவங்கியது.


நிர்ணயம்

கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கு இடையிலான கால அவகாசம், 28 நாட்களாக நிர்ணயம் செய்யப்பட்டது.கோவிஷீல்டுக்கான கால அவகாசம், 4 - 8 வாரங்களாக இருந்தது.இது பின், 12 - 16 வாரங்களாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா கூறியதாவது:ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், ஆஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசியை, பிரிட்டன் அதிகளவு பயன்படுத்துகிறது.அங்கு, இரண்டு டோஸ் தடுப்பூசிகளுக்கு இடையே 12 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.எனவே தான், உருமாறிய, 'ஆல்பா' வகை வைரசை, அவர்கள் வெற்றிகரமாக எதிர்கொண்டு மீள முடிந்தது.அந்த தரவுகளின் அடிப்படையில் தான், நம் நாட்டிலும் கோவிஷீல்டு தடுப்பூசியின் கால அவகாசத்தை, 12 - 16 வாரங்களாக உயர்த்தினோம்.
பிரிட்டன் சுகாதார துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 12 வார இடைவெளியில் தடுப்பூசி போடுவதால், அதன் செயல்திறன், 65 - 88 சதவீதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மதிப்பீடுஅடுத்து, ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி, 33 சதவீத பாதுகாப்பையும், இரண்டு டோஸ், 60 சதவீத பாதுகாப்பையும் அளிப்பதாக கூறப்பட்டு உள்ளது.இதையடுத்து, நம் நாட்டில் கோவிஷீல்டு தடுப்பூசியின் கால அவகாசத்தை, மீண்டும், 4 - 8 வாரங்களாக குறைப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படும் தரவுகளின் அடிப்படையிலேயே, தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு முடிவுகளை எடுத்து வருகிறது. மேலும், தடுப்பூசியின் பலன், இரு டோஸ்களுக்கு இடையிலான இடைவெளி, ஒரு டோஸ் மட்டும் போட்டுக் கொள்வதால் ஏற்படும் பலன் ஆகியவை குறித்து மதிப்பீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.நம் நாட்டில், 17 - 18 கோடி பேர் ஒரு டோசும், 4 கோடி பேர் மட்டுமே இரு டோசும் போட்டுக் கொண்டுள்ளதால், இது போன்ற மதிப்பீடுகள் அவசியமாகிறது.கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோஸ் மற்றும் இரு டோஸ்களுக்கு இடையிலான பலன் குறித்து, வேலுார் சி.எம்.சி., மருத்துவமனை சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது.அதில், ஒரு டோஸ் 61 சதவீதமும், இரு டோஸ் 65 சதவீதமும் பலன் அளிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தடுப்பூசியில் கன்றுக்குட்டி சீரம்

மத்திய அரசு விளக்கம்!தெலுங்கானாவின் ஐதராபாதை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், உள்நாட்டிலேயே தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியில், கன்றுக்குட்டியின் சீரம் கலக்கப்படுவதாக, சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.இது குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதன் விபரம்:போலியோ, ரேபிஸ் உள்ளிட்ட அனைத்து விதமான தடுப்பூசி தயாரிப்புக்கும், 'வெரோ செல்கள்' பயன்படுத்தப்படுகின்றன. இதன்உற்பத்திக்கு, கன்றுக்குட்டி சீரம் பயன்படுத்துவது உலக அளவிலான நடைமுறை.வெரோ செல்கள் முழுமையான வளர்ச்சி அடைந்தவுடன், அதிலிருக்கும் கன்றுக்குட்டி சீரம், தண்ணீர் மற்றும் அமிலங்கள் உதவியுடன் தானாகவே நீங்கிவிடும். அதன் பிறகே, அந்த வெரோ செல்கள், தடுப்பு மருந்தில் சேர்க்கப்படும். எனவே, கொரோனா தடுப்பூசிகளில், கன்றுக்குட்டி சீரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PALANISWAMY BALAKRISHNAN - tirupur,இந்தியா
17-ஜூன்-202117:46:39 IST Report Abuse
PALANISWAMY BALAKRISHNAN நீங்கள் எங்கள் உயிர்களோடு விளையாடுகிண்டீர்கள், இது தேசத்திற்கு நீங்கள் செய்யும் மபாடகம், சரியான இடைவெளியை சொல்ல கூடவா நமது இந்தியன் கவுன்சில் ஆப் மெடிக்கல் ரெசெர்ச் க்கு தகுதி இல்லை
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
17-ஜூன்-202108:19:04 IST Report Abuse
VENKATASUBRAMANIAN சாந்தி என்னும் கம்யூனிஸ்ட் மருத்துவர் தவறான தகவல்களை விவாதங்களில் தெரிவிக்கிறார். இதை படிக்கவும்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
17-ஜூன்-202100:52:51 IST Report Abuse
blocked user தடுப்பூசி தவிர அலோபதி மருத்துவத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் கிடையாது. பாரம்பரிய இந்திய வைத்தியத்தில் மிளகு, துளசி, நெல்லிக்காய் போன்ற பல அபூர்வ சக்திமிகு மருந்துகள் உண்டு. அவற்றை சாதாரணமாக உணவில் சேத்துக்கொண்டாலே நல்ல பலன் கிடைக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X