பிரான்ஸில் இனி முகக்கவசம் கட்டாயமில்லை: தொற்று குறைந்ததால் சலுகை

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் கோவிட் தொற்று பாதிப்பு குறைந்துள்ளதாலும், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாலும் வெளியிடங்களில் முகக்கவசம் கட்டாயம் எனும் விதியை வியாழன் முதல் தளர்த்துவதாக அந்நாட்டு பிரதமர் ஜான் கேஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார். சுமார் 7 கோடி மக்கள் தொகை கொண்ட பிரான்ஸில் செவ்வாயன்று தினசரி தொற்று பாதிப்பு 3,200 என்ற எண்ணிக்கைக்கு

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் கோவிட் தொற்று பாதிப்பு குறைந்துள்ளதாலும், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாலும் வெளியிடங்களில் முகக்கவசம் கட்டாயம் எனும் விதியை வியாழன் முதல் தளர்த்துவதாக அந்நாட்டு பிரதமர் ஜான் கேஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார்.



latest tamil news



சுமார் 7 கோடி மக்கள் தொகை கொண்ட பிரான்ஸில் செவ்வாயன்று தினசரி தொற்று பாதிப்பு 3,200 என்ற எண்ணிக்கைக்கு வந்திருக்கிறது. 2020 ஆகஸ்டுக்கு பின் இதுவே அந்நாட்டின் குறைந்தபட்ச பாதிப்பு ஆகும். கடந்த ஆண்டு இறுதியில் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், நாட்டில் தொற்று பாதிப்பை 5 ஆயிரமாக குறைக்க திட்டமிட்டார். அவரது இலக்கை காட்டிலும் தொற்று பாதிப்பு சரிந்துள்ளது.


latest tamil news



இதனால் அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை நீக்கி அறிவித்துள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் ஜான் கேஸ்டெக்ஸ், “வியாழன் முதல் வெளியிடங்களில் கட்டாய முகக்கவசம் என்பது சில விதிவிலக்குகளுடன் நீக்கப்படும். நெரிசலான இடங்களிலும், அரங்கங்களிலும் தேவைப்படும். கோவிட் ஊரடங்கு உத்தரவு ஜூன் 20 அன்று ரத்து செய்யப்படும். நாட்டின் சுகாதார நிலை எதிர்பார்த்ததை விட வேகமாக முன்னேறியிருக்கிறது. கோடைகால முடிவில் (செப்டம்பர்) சுமார் 3.5 கோடி மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.” என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
17-ஜூன்-202105:44:50 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே உசாரு பிரான்ஸ் வாசிகளே IMANA போன்ற NGO க்கள் மற்ற நாட்டின் நோய் காண்பித்து பண வசூலில் ஈடுபடும் நேரம் இது அவர்களே நோய் பரப்பி பின்னர் அதன் மூலம் காசு சம்பாதிக்க முயற்சிக்கலாம்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
16-ஜூன்-202122:35:11 IST Report Abuse
Ramesh Sargam சுமார் 7 கோடி மக்கள் தொகை கொண்ட பிரான்ஸில் இப்பத்தான் வைரஸ் தொற்று குறைய தொடங்கி இருக்கிறது. ஆனால், இந்தியாவில் 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை. இந்திய அரசு எப்படி சமாளிக்கிறது என்பதை பாராட்டாமல், இந்தியாவில் உள்ள எதிர் கட்சியினரும், மற்றும் பல நாடுகளும் இந்தியாவை குறை கூறுகின்றன. அமெரிக்காவில் வெளிவரும் தி நியூ யார்க் டைம்ஸ், பத்திரிகை தினமும் இந்தியாவை பற்றியும், மோடியின் திறமையை குறைகூறியும் செய்தி வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. அந்த பத்திரிகைக்கு தவறான செய்திகள் கொடுப்பது நமது நாட்டின் எதிர் கட்சியினரே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X