பொது செய்தி

இந்தியா

டுவிட்டர்' நிறுவனத்துக்கான சட்ட பாதுகாப்பு நீக்கம்

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (9+ 19)
Share
Advertisement
புதுடில்லி :தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளை நிறைவேற்றாததால், அமெரிக்காவை சேர்ந்த, 'டுவிட்டர்° சமூக வலைதளத்துக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த, சட்ட பாதுகாப்பை நீக்கி, மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த தளத்தில் மூன்றாம் தரப்பினர் வெளியிடும் சர்ச்சை மற்றும் ஆட்சேபகரமான பதிவுகளுக்கு, இனி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.'பேஸ்புக், வாட்ஸ் ஆப்'
'டுவிட்டர்' நிறுவனம், சட்ட பாதுகாப்பு, பதிவுகள் ,பொறுப்பு

புதுடில்லி :தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளை நிறைவேற்றாததால், அமெரிக்காவை சேர்ந்த, 'டுவிட்டர்° சமூக வலைதளத்துக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த, சட்ட பாதுகாப்பை நீக்கி, மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த தளத்தில் மூன்றாம் தரப்பினர் வெளியிடும் சர்ச்சை மற்றும் ஆட்சேபகரமான பதிவுகளுக்கு, இனி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் 'அமேசான், நெட்பிளிக்ஸ்' உள்ளிட்ட, ஓ.டி.டி., எனப்படும் இணைய பொழுதுபோக்கு தளங்களை கட்டுப்படுத்தும் வகையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.இந்த சட்டம், கடந்த மாதம் 26ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
கட்டுப்பாடுகள்இந்த விதிகளின்படி, பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்க வசதியாக, இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். 'மத்திய அரசு ஆட்சேபனை தெரிவிக்கும் பதிவுகளை குறிப்பிட்ட நேரத்துக்குள் நீக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட பதிவை, முதலில் யார் வெளியிட்டது என்ற தகவல் தெரிவிக்க வேண்டும்' என, பல கட்டுப்பாடுகள் உள்ளன.பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்கள் இந்தக் கட்டுப்பாடுகளை ஏற்று, நிபந்தனைகளை நிறைவேற்றியுள்ளன. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்து உள்ளது. மேலும், மத்திய அரசுக்கு எதிராகவும், சட்டத்துக்கு எதிராகவும் கருத்துகளை வெளியிட்டது.இதையடுத்து, புதிய விதிகளின்படி இந்தியாவில் அதிகாரிகளை நியமிப்பது உள்ளிட்டவற்றை நிறைவேற்ற, டுவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு இறுதி கெடு வழங்கியது.

இது தொடர்பாக, இம்மாதம் 5ம் தேதி அந்த நிறுவனத்துக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.ஆனால், அந்த நிறுவனம் நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை. இதையடுத்து, டுவிட்டர் சமூக தளத்துக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த சட்ட பாதுகாப்பு நீக்கப்படுவதாக, மத்திய அரசு கூறியுள்ளது.இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளதாவது:இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டும், இந்திய மக்களுக்கு உரிய வசதிகளை, தெளிவான மற்றும் வெளிப்படையான நடவடிக்கைகளை டுவிட்டர் உறுதி செய்யவில்லை.புதிய சட்ட விதிகளை செயல்படுத்துவது குறித்து தெளிவான பதிலும் அளிக்கவில்லை.
நடவடிக்கைதகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, பயனாளிகள் பதிவிடும் பதிவுகளுக்கு சமூக வலைதளங்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை. சட்ட திருத்தத்தின்படி, அரசின் கட்டுப்பாடுகளை நிறைவேற்றாத நிறுவனங்களுக்கு, இந்த விலக்கு ரத்து செய்யப்படும்.அதன்படி, டுவிட்டர் நிறுவனத்துக்கான சட்ட பாதுகாப்பு ரத்து செய்யப்படுகிறது. அந்த சமூக வலைதளத்தில் மூன்றாம் நபர் வெளியிடும் பதிவுகளுக்கு, இனி அந்த நிறுவனமே பொறுப்பாகும். ஆட்சேபகரமான பதிவுகள் இருந்தால், நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


உ.பி.,யில் வழக்கு பதிவு'ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட வற்புறுத்தி, சிலர் என்னை தாக்கினர்' என, உத்தர பிரதேசத்தின் காஜியாபாதைச் சேர்ந்த, முஸ்லிம் முதியவர் ஒருவர் கூறும், 'வீடியோ' வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. இது தொடர்பாக, பா.ஜ.,வைச் சேர்ந்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் காங்., முன்னாள் தலைவர் ராகுல், சமூக வலைதளத்தில், பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.இந்நிலையில், இந்த வீடியோவை வெளியிட்ட டுவிட்டர் நிறுவனம், ஒரு செய்தி இணையதளம், சில பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் மீது, காஜியாபாத் போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

'தகவல்களை விசாரிக்காமல், அந்த வீடியோவை இவர்கள் பதிவிட்டுள்ளனர். இதன் மூலம் மதக் கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளனர்' என, புகாரில் கூறப்பட்டுள்ளது.'தனிப்பட்ட பகையில், அந்த முஸ்லிம் முதியவரை, அவருடைய பகுதியைச் சேர்ந்த, ஹிந்து மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் தாக்கிஉள்ளனர். 'ஆனால், மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில், பொய்யான நோக்கத்துடன், சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது' என, போலீசார் தெரிவித்தனர்.


வாய்ப்பை தவறவிட்டதுபா.ஜ., மூத்த தலைவரும், மத்திய தகவல் தொழில்நுட்பம், சட்ட துறை அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள, 'கூ' செயலியில் தன் கருத்தை பதிவு செய்துள்ளார்; டுவிட்டர் தளத்திலும் பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:டுவிட்டர் நிறுவனத்துக்கு பல வாய்ப்புகள் வழங்கப்பட்டு விட்டன. அவற்றை பயன்படுத்தி, சட்ட விதிகளுக்கு உட்பட்டு, நிபந்தனைகளை நிறைவேற்றி இருக்க வேண்டும். ஆனால், அந்த நிறுவனம் செயல்படுத்த மறுக்கும் முடிவை எடுத்துள்ளது.

இதில் முக்கியமானது, குறைதீர்வு அதிகாரியை நியமிக்க மறுப்பது தான். இந்திய மக்கள் தங்களுடைய குறைகளை தெரிவிக்க, இந்த நிறுவனம் வாய்ப்பு தரவில்லை.அமெரிக்கா உட்பட எந்த நாடாக இருந்தாலும், அங்கு செயல்படும் இந்திய நிறுவனங்கள், அங்குள்ள விதிகளை பின்பற்றுகின்றன. அதே நேரத்தில், இந்தியாவில் இயங்கும் ஒரு வெளிநாட்டு நிறுவனம், இந்திய விதிகளை ஏற்க மறுப்பதை ஏற்க முடியாது.

நம் நாட்டில், 1.75 கோடி பேர் டுவிட்டரை பயன்படுத்துகின்றனர். பயனாளிகளின் விருப்பத்தை நிறைவேற்றாமல், தன் சொந்த விருப்பத்துக்கு ஏற்ப, அந்த நிறுவனம் செயல்படுவதை ஏற்க முடியாது.அதுவும், தற்போது சமூக வலைதளங்களில் பொய் தகவல்கள் அதிகமாக பரப்பப்படும் நிலையில், அதை கட்டுப்படுத்த அரசுக்கு அந்த நிறுவனம் உதவ வேண்டும். இங்குள்ள சட்ட விதிகளை ஏற்க மறுக்கும் இந்த நிறுவனம், கருத்து சுதந்திரத்துக்காக போராடுவதாக காட்டிக் கொள்வது வேடிக்கை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (9+ 19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-ஜூன்-202115:18:36 IST Report Abuse
Pugazh V ஒரு பக்கம் டிஜிட்டல் இண்டியா, வளர்ச்சி முன்னேற்றம் என்கிறீர்கள். மோடி முதல் நிர்மலா சீதாராமன் வரை ட்விட்டரில் அரசாங்கம் நடக்கிறது. ட்வீட்டர் மற்றும் பேஸ்புக் இரண்டையும் தடை செய்யவேண்டும் அடுத்தது யூடுப் என்று எழுதுகிறார்களே???
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
17-ஜூன்-202113:42:27 IST Report Abuse
மலரின் மகள் மிகப்பெரிய சூதாட்ட களம் போல சில வலைத்தளங்கள். ஒரே ஒரு டுவீட் செய்தால் போதும் அது சமூகத்தையும் வியாபாரத்தையும் ஒரே நொடியில் தலைகீழாக மாற்றுகிறது. அப்படி அவர்களே செய்துவிடுவார்கள் போல. கோகோ கோலா பாட்டிலை ஓரமாக வைத்து விட்டு தண்ணீர் பாட்டிலை எடுத்தால் போயிற்று பல ஆயிரம் கோடி நஷடம் என்று காண்பிக்க வல்லவர்களாக இருக்கிறார்கள் என்றால் அதன் பின்னணியில் வேறேதோ இருக்கும்போல. அரசியல் மற்றும் ஒரு தேசத்தினுள்ளே அவர்கள் நுழையும்போது மிகவும் ஆபத்து வந்துவிடும். இன்வாடிங் செய்வது போலத்தான். சைபர் தாக்குதலில் வலைதளத்தின் செய்தியுனூடே அரசியல் வணிகத்தை வேண்டியபடி மாற்றுவதும் முக்கியவகைதான். அந்நியர்கள் உள்ளே புகுந்து வேற்றுமையில் ஒற்றுமையை சிதைக்கிறார்கள். தவிர்க்கப்படவேண்டியவர்கள். வருகின்ற கோடானகோடி வருவாயில் சில ஆயிரங்களை தண்டத்தொகையாக கட்டிவிட்டு லாபமீட்டவே விளைவார்களையோ என்று எண்ணத்தோன்றும் வகையில் இருக்கலாமோ சிலரின் செய்கைகள். யார் அறிவார். இறைவனுக்கே வெளிச்சமல்லவா
Rate this:
Cancel
Gopal - Jakarta,இந்தோனேசியா
17-ஜூன்-202111:46:43 IST Report Abuse
Gopal நல்ல முடிவு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X