அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா கணக்கில் குளறுபடி: பா.ஜ., எம்.எல்.ஏ., புகார்

Added : ஜூன் 16, 2021
Share
Advertisement
கோவை, : ''மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் அன்றாடம் மேற்கொள்ளும் பரிசோதனை எண்ணிக்கையை குறைப்பதால் தான், கோவையில் கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை குறைந்ததாக கூறப்படுகிறது. பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்,'' என்று பா.ஜ., எம்.எல்.ஏ., வானதிசீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.கோவை சிங்காநல்லுாரிலுள்ள இ.எஸ்.ஐ.,மருத்துவமனைக்கு, மருத்துவ உபகரணங்களை வழங்கிய பின்

கோவை, : ''மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் அன்றாடம் மேற்கொள்ளும் பரிசோதனை எண்ணிக்கையை குறைப்பதால் தான், கோவையில் கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை குறைந்ததாக கூறப்படுகிறது.

பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்,'' என்று பா.ஜ., எம்.எல்.ஏ., வானதிசீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.கோவை சிங்காநல்லுாரிலுள்ள இ.எஸ்.ஐ.,மருத்துவமனைக்கு, மருத்துவ உபகரணங்களை வழங்கிய பின் நிருபர்களிடம் அவர் மேலும் கூறுகையில், ''கோவையில் வீடு, வீடாக கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். நகரின் முக்கிய பகுதிகளில் முகாம்கள் நடத்த வேண்டும்.மின்கட்டண அளவீட்டை, மின்நுகர்வோரே போட்டோ எடுத்து அனுப்ப சொல்வது சரியானதல்ல. கொரோனா காலத்தில் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக, இணைப்பை துண்டிப்பதும் நியாயமானதல்ல. கட்டணம் செலுத்த அரசு சலுகைகள் அறிவிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X