பொது செய்தி

தமிழ்நாடு

சபதம்!

Added : ஜூன் 16, 2021
Share
Advertisement
திருப்பூர் : ''அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, கொரோனா இல்லாத மாவட்டமாக உருவாக்க, ஒன்றிணைந்து பாடுபடுவோம்,'' என, புதிய கலெக்டர் வினித் நம்பிக்கை தெரிவித்தார். திருப்பூர் மாவட்டத்தின், ஏழாவது கலெக்டராக வினித், நேற்று பொறுப்பேற்று கொண்டார். கலெக்டராக பணியாற்றிய விஜயகார்த்திகேயன், மனித உரிமைகள் ஆணைய செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.நேற்று காலை, 11:30 மணிக்கு, வினித்,

திருப்பூர் : ''அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, கொரோனா இல்லாத மாவட்டமாக உருவாக்க, ஒன்றிணைந்து பாடுபடுவோம்,'' என, புதிய கலெக்டர் வினித் நம்பிக்கை தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டத்தின், ஏழாவது கலெக்டராக வினித், நேற்று பொறுப்பேற்று கொண்டார். கலெக்டராக பணியாற்றிய விஜயகார்த்திகேயன், மனித உரிமைகள் ஆணைய செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.நேற்று காலை, 11:30 மணிக்கு, வினித், கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். டி.ஆர்.ஓ., சரவணமூர்த்தி, துணை கலெக்டர்கள், தாசில்தார் உட்பட அனைத்து அரசுத்துறையினரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.பொறுப்பேற்ற பின், கலெக்டர் வினித் கூறியதாவது:மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால், தொற்று பரவல் குறைந்து வருகிறது.

முதல்கட்டமாக, கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள்கொண்டுவர, அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்படும்.இக்கட்டான காலகட்டத்தில், பாதிப்பில் இருந்து மக்களை காக்கவும், தொற்று பரவாமல் தடுக்கவும், கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதாரத்துறையுடன் ஆலோசித்து, தேவையான முடிவுகள் எடுக்கப்படும்.மாவட்டத்தில், தடுப்பூசி செலுத்த கூட்டம் அலைமோதுவதாக செய்தி வெளியாகியுள்ளது. தற்போதுள்ள தடுப்பூசி மருந்தை கொண்டு, முறையாக தடுப்பூசி முகாம் நடத்தப்படும். அரசிடம் பேசி, கூடுதல் தடுப்பூசியை பெற்று, தடுப்பூசி செலுத்துவது விரைவுபடுத்தப்படும்.

மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கமிட்டி அமைத்து, கொரோனா பரிசோதனை முடிவு விரைவாக கிடைக்கவும், தடுப்பூசி முகாம் முறையாக நடக்கவும் ஆவன செய்யப்படும். பொதுமக்கள் கூட்டம் சேர்வதை தவிர்க்க, தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வது குறித்து அரசு வழிகாட்டுதல் வழங்கும்.அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, கொ ரோனா இல்லாத மாவட்டமாக உருவாக்க, ஒன்றிணைந்து பாடுபடுவோம்.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.

கொரோனா பரிசோதனைமாவட்டத்தில், கொரோனா பரிசோதனை முடிவு கிடைக்க மிகவும் தாமதம் ஏற்படுகிறது. பரிசோதனை மாதிரி எடுத்த மூன்று நாட்களுக்கு பிறகே முடிவு தெரிகிறது. அதற்குள், சிலருக்கு தொற்று பரவிவிடுகிறது.எனவே, தனியார் 'லேப்' அல்லது, கூடுதல் ஆய்வக வசதி என, விரிவான ஏற்பாடுகளை செய்து, 24 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை முடிவு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.கலெக்டர் உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகள், நேரடியாக களமிறங்கி, மக்களை சந்தித்து, குறைபாடுகளை தீர்த்து வைக்க வேண்டும் என்பது, கடைகோடியில் உள்ள சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு.

தடுப்பூசி மருந்து ஒதுக்கீடு செய்ததும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம், அறிவிப்பு செய்து, தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும். இனியும் அமைதியாக வேடிக்கை பார்க்காமல், தடுப்பூசி விவகாரத்தில் நிலவும் அதிருப்தியை போக்க, சரியான முன்னேற்பாடுகளுடன் முகாம் நடத்த வேண்டும்.தடுப்பூசி முகாம் நடக்கும் பகுதிகள், ஆளுங்கட்சியினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டதாக புகார் எழுந்துள்ளது. எவ்வித அதிகாரமும் இல்லாத நபர்கள், 'டோக்கன்' வழங்குகின்றனர்.அரசியல் கட்சியினரும், இத்தகைய புகாரை பகிரங்கமாக முன்வைக்க துவங்கி விட்டனர்.பொதுமக்களின் நம்பிக்கையை பெறும் வகையில், நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில், தனிநபர் தலையீடு இல்லாத நிலையை உருவாக்க, கலெக்டர் சாட்டையை சுழற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X