தொற்றை பரப்பும் தி.மு.க., கட்சியினர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொற்றை பரப்பும் தி.மு.க., கட்சியினர்

Added : ஜூன் 16, 2021
Share
குனியமுத்தூர் : குனியமுத்தூர் அடுத்த இடையர்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே ரேஷன் கடையில் (எண்: 53271),கொரோனா நிவாரண தொகை, 2000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்படுகிறது. கடந்த இரு நாட்களாக நடக்கும் இப்பணியின்போது, அப்பகுதியை சேர்ந்த தி.மு.க.,வினர், அங்கு வருகின்றனர். கடைக்காரர் வழங்கும் தொகை, குறைந்தபட்சம் கட்சியினர் ஆறு பேரின் கை மாறிய பிறகே, பயனாளியின்

குனியமுத்தூர் : குனியமுத்தூர் அடுத்த இடையர்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே ரேஷன் கடையில் (எண்: 53271),கொரோனா நிவாரண தொகை, 2000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்படுகிறது.

கடந்த இரு நாட்களாக நடக்கும் இப்பணியின்போது, அப்பகுதியை சேர்ந்த தி.மு.க.,வினர், அங்கு வருகின்றனர். கடைக்காரர் வழங்கும் தொகை, குறைந்தபட்சம் கட்சியினர் ஆறு பேரின் கை மாறிய பிறகே, பயனாளியின் கைக்கு வருகிறது.தொற்று பரவலை தவிர்க்க, கூட்டம் கூடக்கூடாது. சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். ஆனால் கட்சியினரோ, கும்பலாக நிற்கின்றனர்.மக்கள் நலனை கருத்தில் கொண்டு, கட்சியினரின் தலையீட்டை தவிர்த்தால் நல்லது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X