சடலம் எரிக்க அதிக பணம் வசூலித்தவருக்கு ஜாமின்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

 சடலம் எரிக்க அதிக பணம் வசூலித்தவருக்கு ஜாமின்

Added : ஜூன் 16, 2021
Share
கோவை : கோவை, நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த, வெங்கடேஷ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். சடலத்தை எடுத்து சென்று, மின்மயானத்தில் எரியூட்ட, ஆம்புலன்ஸ் டிரைவர் சாதிக்பாட்சா, 25 ஆயிரம் ரூபாய் கேட்டார்.பேரம் பேசி 13,500 ரூபாய் வசூலித்தார். அதிக பணம் வசூலித்தது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் துடியலுார் போலீசில் அளித்த

கோவை : கோவை, நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த, வெங்கடேஷ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சடலத்தை எடுத்து சென்று, மின்மயானத்தில் எரியூட்ட, ஆம்புலன்ஸ் டிரைவர் சாதிக்பாட்சா, 25 ஆயிரம் ரூபாய் கேட்டார்.பேரம் பேசி 13,500 ரூபாய் வசூலித்தார். அதிக பணம் வசூலித்தது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் துடியலுார் போலீசில் அளித்த புகாரின் பேரில், சாதிக்பாட்சாவை,34, கடந்த 19ம் தேதி கைது செய்து சிறையிலடைத்தனர்.ஜாமினில் விடுவிக்க கோரி, கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி சக்திவேல், நிபந்தனை ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டார்.நீதிமன்றம் செயல்பட துவங்கிய, 15 நாட்களில், இருநபர் ஜாமின்தாரருடன் ஆஜராகவும், தினசரி சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி கையெழுத்திடவும், நிபந்தனை விதிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X