தண்ணீர் விடும் நேரத்தை தயவு செய்து மாத்துங்க!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் விடும் நேரத்தை தயவு செய்து மாத்துங்க!

Added : ஜூன் 16, 2021
Share
நேரத்தை மாத்துங்க !வேடப்பட்டி சத்தியா நகர் 7வது வார்டில், பலர் கூலி வேலைக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் வேலைக்கு செல்கின்றனர். போர்வெல் தண்ணீர் மதியம், 12:00 மணிக்கு திறந்து விடப்படுவதால் சிரமமாக உள்ளது. தண்ணீர் திறக்கும் நேரத்தை, மாலை 5:00 மணிக்கு மேல் மாற்ற வேண்டும்.-ஜெகநாதன், சத்யாநகர்.நாய் தொல்லைஉக்கடம் அல் அமீன் வீதி, ஹவுசிங் யூனிட் பகுதிகளில், நாய்கள் தொல்லை

நேரத்தை மாத்துங்க !வேடப்பட்டி சத்தியா நகர் 7வது வார்டில், பலர் கூலி வேலைக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் வேலைக்கு செல்கின்றனர். போர்வெல் தண்ணீர் மதியம், 12:00 மணிக்கு திறந்து விடப்படுவதால் சிரமமாக உள்ளது. தண்ணீர் திறக்கும் நேரத்தை, மாலை 5:00 மணிக்கு மேல் மாற்ற வேண்டும்.-ஜெகநாதன், சத்யாநகர்.

நாய் தொல்லைஉக்கடம் அல் அமீன் வீதி, ஹவுசிங் யூனிட் பகுதிகளில், நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. வருவோர், போவோரை விரட்டுவதால் அச்சமாக உள்ளது.-மகேஷ்வரன், அல் அமீன் வீதி.

சோலார் விளக்கு சர்வீஸ் பீளமேடு, 39வது வார்டு மாஸ்தி வீதி, துக்கினார், ரங்கம்மாள் உள்ளிட்ட பகுதிகளில், சோலார் மின் விளக்குகள் பல லட்சம் ரூபாய் செலவில் பொருத்தப்பட்டது. இதில் சில விளக்குகள் சரியாக எரிவதில்லை. எரியாத விளக்குகள் மட்டுமின்றி, அனைத்து விளக்குகளுக்கும் சர்வீஸ் செய்து தந்தால், நீண்டநாட்கள் பயன்பாட்டில் இருக்கும்.- தாமரைச்செல்வி, பீளமேடு.

சாலை மோசம்ஆவாரம்பாளையம் முதல் காந்திபுரம் செல்லும்சாலை, பெரும்பாலும் சேதமடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இச்சாலையை சரிசெய்து தர, நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முருகன், ஆவாரம்பாளையம்.

கிருமிநாசினி பயன்பாடு இல்லைடவுன்ஹால், காந்திமாநகர், பீளமேடு, சிங்காநல்லுார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடைகள், உணவகங்களில் பணியாளர்கள் முறையாக மாஸ்க் அணிவதில்லை. வாடிக்கையாளர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்படுவதில்லை.-கீதா, சிங்காநல்லுார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X