சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெளி மாவட்டத்தில் இருந்து வாங்கி வந்து மது விற்பனை

Added : ஜூன் 16, 2021
Share
Advertisement
பொங்கலுார் : மதுபானம் விற்றவரை போலீசார் கைது செய்து, கார், பைக்கை பறிமுதல் செய்தனர்.காமநாயக்கன்பாளையம் போலீசார், பொங்கலுார் கள்ளிப்பாளையம் செக்போஸ்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த அன்பழகன், 40, விஜயராகவன், 35, விஜயகுமார், 33, கோபி, 40, மாரிமுத்து, 38, சதீஷ், 32

பொங்கலுார் : மதுபானம் விற்றவரை போலீசார் கைது செய்து, கார், பைக்கை பறிமுதல் செய்தனர்.காமநாயக்கன்பாளையம் போலீசார், பொங்கலுார் கள்ளிப்பாளையம் செக்போஸ்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த அன்பழகன், 40, விஜயராகவன், 35, விஜயகுமார், 33, கோபி, 40, மாரிமுத்து, 38, சதீஷ், 32 அங்கமுத்து, 40, விக்னேஷ், 30 ஆகியோர், தங்கள் மாவட்டங்களில் மதுக்கடை மூடப்பட்டுள்ளதால், வெளி மாவட்டங்களுக்குச் சென்று மது வாங்கி வந்தது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து, 97 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் ஓட்டி வந்த நான்கு கார்கள் மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கர்நாடக 'சரக்கு'விற்றவர் கைதுஅவிநாசி எஸ்.ஐ., கார்த்திக் தங்கம் மற்றும் போலீசார் நடத்திய வாகன சோதனையில், அவிநாசி சூளை பகுதியில், சட்ட விரோதமாக கர்நாடக மதுபானங்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது.அப்பகுதியை சேர்ந்த முத்துக்குமார், 35 என்பவர், கர்நாடக மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்தது, தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.வாலிபர் கைதுபெருமாநல்லூர் ஏ.டி காலனி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ், இவரது மகன் சூர்யா, 23. இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர் சட்ட விரோதமாக புதுச்சேரியில் இருந்து, மது பாட்டில்களை கடத்தி வந்து வீட்டில் வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். தகவல் அறிந்த பெருமாநல்லூர் போலீசார் சூர்யாவை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X