தடம் மாறியதா தடுப்பூசி? மறியலுக்கு மக்கள் முயற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'தடம்' மாறியதா தடுப்பூசி? மறியலுக்கு மக்கள் முயற்சி

Added : ஜூன் 16, 2021
Share
குனியமுத்தூர் : ஆத்துப்பாலம் அடுத்து குனியமுத்தூர் அருகேயுள்ள, அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று கொரோனா தொற்று தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. காலை, 7:00 மணிக்கே மக்கள் வந்து வரிசையில் காத்திருக்க துவங்கினர். 9:00 மணியளவில் டோக்கன் வழங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், டோக்கன்கள் முன்னரே வினியோகிக்கப் பட்டு விட்டதாக, தகவல் பரவியது.அதிர்ச்சியடைந்த மக்கள் பள்ளியின்

குனியமுத்தூர் : ஆத்துப்பாலம் அடுத்து குனியமுத்தூர் அருகேயுள்ள, அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று கொரோனா தொற்று தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.

காலை, 7:00 மணிக்கே மக்கள் வந்து வரிசையில் காத்திருக்க துவங்கினர். 9:00 மணியளவில் டோக்கன் வழங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், டோக்கன்கள் முன்னரே வினியோகிக்கப் பட்டு விட்டதாக, தகவல் பரவியது.அதிர்ச்சியடைந்த மக்கள் பள்ளியின் முன், தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்ய சென்றனர். அங்கிருந்த போலீசார், மற்றும் மாநகராட்சி யினர், 'வரிசையில் காத்திருப்போருக்கு டோக்கன் வழங்கப்படும்' என கூறி, அவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து, மக்கள் மீண்டும் பள்ளி வளாகத்திற்கு திரும்பினர். பிரச்னை முடிவுக்கு வந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X