சிறப்பு ரயில் இயக்கம் தெற்கு ரயில்வே அனுமதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு ரயில் இயக்கம் தெற்கு ரயில்வே அனுமதி

Added : ஜூன் 16, 2021
Share
திருப்பூர் : சென்னை வழியாக, திருவனந்தபுரம் - கவுகாத்தி இடையே சிறப்பு ரயில் வரும், 19 ம் தேதி இயக்கப்பட உள்ளது. சனிக்கிழமை தோறும் திருவனந்தபுரத்தில் இருந்து மாலை, 6:00 மணிக்கு புறப்படும் ரயில், செவ்வாய் (22 ம் தேதி) காலை, 9:00 க்கு அசாம் மாநிலம், கவுகாத்தி சென்று சேரும். மறுமார்க்கமாக, 23 ம் தேதி (புதன்) காலை, 6:45 க்கு கவுகாத்தியில் புறப்படும் ரயில், 26 ம் தேதி (வெள்ளி) இரவு, 11:10 மணிக்கு

திருப்பூர் : சென்னை வழியாக, திருவனந்தபுரம் - கவுகாத்தி இடையே சிறப்பு ரயில் வரும், 19 ம் தேதி இயக்கப்பட உள்ளது.

சனிக்கிழமை தோறும் திருவனந்தபுரத்தில் இருந்து மாலை, 6:00 மணிக்கு புறப்படும் ரயில், செவ்வாய் (22 ம் தேதி) காலை, 9:00 க்கு அசாம் மாநிலம், கவுகாத்தி சென்று சேரும். மறுமார்க்கமாக, 23 ம் தேதி (புதன்) காலை, 6:45 க்கு கவுகாத்தியில் புறப்படும் ரயில், 26 ம் தேதி (வெள்ளி) இரவு, 11:10 மணிக்கு திருவனந்தபுரம் வந்து சேரும்.தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்டரல் ஸ்டேஷனில் ரயில் நின்று செல்லும். எக்ஸ்பிரஸ் ரயில் கவுகாத்தி செல்லும் போது, கோவைக்கு மதியம், 2:27 மணிக்கும், திருப்பூருக்கு, 3:15 மணிக்கும் வரும்.திருவனந்தபுரம் வருகையில் திருப்பூருக்கு இரவு, 11:53 மணிக்கு வரும் சிறப்பு ரயில், கோவையை நள்ளிரவு, 12:52 மணிக்கு கடக்கும் என, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X