தடுப்பூசி செலுத்த கூட்டம் அதிகாரிகள் மாற்று ஏற்பாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்த கூட்டம் அதிகாரிகள் மாற்று ஏற்பாடு

Added : ஜூன் 16, 2021
Share
திருப்பூர் : மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தினமும், 200க்கும் அதிகமானவர்கள் வரிசையில் நிற்பதாலும், கூட்டம் சேர்வதாலும், பிற நோயாளிகள் சிகிச்சைக்கு வருவதும், சிகிச்சை அளிப்பதும் சிரமமாக மாறியுள்ளது.மகப்பேறு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகளும் பல்வேறு தொந்தரவுகளை சந்திக்கின்றனர். மக்கள் ஒரே

திருப்பூர் : மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

தினமும், 200க்கும் அதிகமானவர்கள் வரிசையில் நிற்பதாலும், கூட்டம் சேர்வதாலும், பிற நோயாளிகள் சிகிச்சைக்கு வருவதும், சிகிச்சை அளிப்பதும் சிரமமாக மாறியுள்ளது.மகப்பேறு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகளும் பல்வேறு தொந்தரவுகளை சந்திக்கின்றனர். மக்கள் ஒரே இடத்தில் கூட்டம் சேர்வதை தவிர்க்க, துணை சுகாதார நிலையம் அல்லது மினி கிளினிக் மூலம் தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளனர். சுகாதாரநிலைய அலுவலர்கள் கூறுகையில், மங்கலத்தில் நான்கு, இடுவாயில் இரண்டு என, ஆறு துணை சுகாதார நிலையங்கள் உள்ளன.

ஒரே இடத்தில் மக்கள் கூட்டம் சேர்வதை தவிர்க்கும் வகையில், துணை சுகாதார நிலையங்களில், தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்படும். அடுத்தமுறை தடுப்பூசி மருந்து வந்தடைந்ததும், துணை சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்படும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X