பொது செய்தி

தமிழ்நாடு

பனியன் தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம்!

Added : ஜூன் 16, 2021
Share
Advertisement
திருப்பூர் : தொற்று இல்லா திருப்பூர்; தடையில்லா தொழில் வளர்ச்சி என்கிற லட்சியத்தை அடைவதற்காக, இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) - 'தினமலர்' இணைந்து, திருப்பூரில், பின்னலாடை தொழிலாளருக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை துவக்கியுள்ளன. திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்களில், வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலாளர் எட்டு லட்சம் பேர் பணிபுரிகின்றனர். ஊரடங்கால், மே

திருப்பூர் : தொற்று இல்லா திருப்பூர்; தடையில்லா தொழில் வளர்ச்சி என்கிற லட்சியத்தை அடைவதற்காக, இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) - 'தினமலர்' இணைந்து, திருப்பூரில், பின்னலாடை தொழிலாளருக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை துவக்கியுள்ளன.

திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்களில், வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலாளர் எட்டு லட்சம் பேர் பணிபுரிகின்றனர். ஊரடங்கால், மே மாதம் முதல் ஆடை உற்பத்தி நிறுத்தப்பட்டது. தளர்வு அளிக்கப்பட்டதால், 7ம் தேதி முதல், ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஜாப்ஒர்க் நிறுவனங்கள் மீண்டும் இயக்கத்தை துவக்கியுள்ளன.தொற்றில்லா திருப்பூரை உருவாக்கி, பின்னலாடை துறையை தடையின்றி இயங்க செய்ய, இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,), தொழிலாளர்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை துவக்கியுள்ளது.

இப்பணியில், 'தினமலர்' நாளிதழ் கைகோர்த்துள்ளது.திட்டத்தின் துவக்கமாக, திருப்பூர் - மங்கலம் ரோடு, சுல்தான்பேட்டையில் உள்ள பிருத்வி இன்னர்வேர்ஸ் நிறுவனத்தில் 500 பேர், பூலுவப்பட்டியில் உள்ள எஸ்.டி., எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் 500 பேர் என, மொத்தம் ஆயிரம் தொழிலாளருக்கு தடுப்பூசி போடப்பட்டது.நேற்று, நல்லுாரில் உள்ள டெக்னோ ஸ்போட்ஸ் நிறுவனத்தில், 225 பேர்; ஊத்துக்குளி ரோட்டில் உள்ள பி.எஸ்., அப்பேரல்ஸில், 425 பேர் என, மொத்தம,் 650 தொழிலாளருக்கு ஊசி போடப்பட்டது.

மருத்துவ குழுவினரை நிறுவனங்களுக்கே அழைத்துவந்து, தடுப்பூசி போடப்படுகிறது. இத்திட்டம் குறித்து, சி.ஐ.ஐ., திருப்பூர் மாவட்ட கவுன்சில் தலைவர் திருக்குமரன், முன்னாள் தலைவர் வெங்கடேஷ் கூறியதாவது:தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து, தனியார் மருத்துவமனை மூலம் தடுப்பூசி பெற்று, திருப்பூரில் பின்னலாடை தொழிலாளருக்கு ஊசி போடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மொத்தம், 2 லட்சம் தொழிலளருக்கு ஊசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம்.இதற்காக, திருப்பூரில், ஐந்து மருத்துவமனைகளுடன் கரம் கோர்த்துள்ளோம்.

ஆடை உற்பத்தி நிறுவனங்கள், இந்திய தொழில் கூட்டமைப்பு மூலம், தனியார் மருத்துவ மனைகளுக்கு தொகை செலுத்தி கொள்முதல் செய்து, தொழிலாளருக்கு இலவசமாக ஊசி போடப்படுகிறது.சி.ஐ.ஐ., ல் உறுப்பினராக உள்ள ஆடை உற்பத்தி நிறுவனங்கள், தங்கள் தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்த, https://forms.gle/f3fwffaHwZMwfGLx7 என்கிற தளத்தில் விவரங்களை பதிவு செய்யவேண்டும்.தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்துவதன்மூலம், வெகு விரைவில், தொற்று இல்லாத திருப்பூர் உருவாகும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இன்றைய முகாம்இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் இன்று, திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டில் உள்ள தன்வர்ஷினி எக்ஸ்போட்ஸ் நிறுவனத்தில் 500 தொழிலாளர்கள். நாளை, எஸ்.ஆர்.ஜி., அப்பேரல் நிறுவனத்தில், 500 தொழிலாளருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X