பொது செய்தி

தமிழ்நாடு

கல்லணையில் தண்ணீர் திறப்பு

Added : ஜூன் 16, 2021
Share
Advertisement
தஞ்சாவூர் : டெல்டா மாவட்ட பாசனத்திற்காக, கல்லணையில் இருந்து, நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்துக்காக, கடந்த 12ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று முன்தினம் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்தது. நேற்று காலை கல்லணையில் உள்ள ஆஞ்சநேயர், ஆதி விநாயகர், கருப்பண்ண சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.பின், நகர்ப்புற

தஞ்சாவூர் : டெல்டா மாவட்ட பாசனத்திற்காக, கல்லணையில் இருந்து, நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்துக்காக, கடந்த 12ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று முன்தினம் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்தது. நேற்று காலை கல்லணையில் உள்ள ஆஞ்சநேயர், ஆதி விநாயகர், கருப்பண்ண சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.பின், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் அதிகாரிகள் எலக்ட்ரானிக் பட்டனை அழுத்தி, தண்ணீரை திறந்தனர்.காவிரியை வணங்கி மலர்களையும், நவதானியங்களையும் ஆற்றில் துாவினர். வெண்ணாற்றில் வினாடிக்கு தலா, 2,000 கன அடியும், கல்லணை கால்வாய், கொள்ளிடத்தில் தலா, 500 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.இதனால் டெல்டா விவசாயிகள் மகழ்ச்சி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X