பொது செய்தி

இந்தியா

'சுகாதார உள்கட்டமைப்பில் கவனம் செலுத்த வேண்டும்'

Added : ஜூன் 16, 2021
Share
Advertisement
புதுடில்லி : “சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை சீர்செய்யும் நடவடிக்கைகளில், உலக நாடுகள் கவனம் செலுத்தவேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஐரோப்பிய நாடான பிரான்சின் தலைநகர் பாரிசில், கடந்த, 2016ம் ஆண்டு முதல், தொழில் முனைவோர்களுக்காக, 'விவா டெக்' என்ற மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான மாநாட்டின் துவக்க விழா நேற்று

புதுடில்லி : “சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை சீர்செய்யும் நடவடிக்கைகளில், உலக நாடுகள் கவனம் செலுத்தவேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஐரோப்பிய நாடான பிரான்சின் தலைநகர் பாரிசில், கடந்த, 2016ம் ஆண்டு முதல், தொழில் முனைவோர்களுக்காக, 'விவா டெக்' என்ற மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான மாநாட்டின் துவக்க விழா நேற்று நடைபெற்றது.இதில், பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்றுப் பேசினார். அதில் அவர் கூறியதாவது: கடந்த ஒரு ஆண்டு காலமாக, கொரோனா வைரசால், உலக நாடுகள், பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால், நாம் பல்வேறு துறைகளில், பல இடையூறுகளை கண்டுள்ளோம். இதனால் நாம் விரக்தி அடைய வேண்டியதில்லை.

பதிலாக, நாம் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்தவேண்டும். கடந்த ஆண்டு இதே நேரத்தில், உலகமே கொரோனாவுக்கான தடுப்பூசியை தேடியது. ஆனால், தற்போது, இந்தியாவில், இரண்டு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுஉள்ளன. மேலும், பல தடுப்பூசிகள், இறுதிகட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவை விரைவில் பயன்பாட்டிற்கு வரும். எதிர்கால சவால்களை கருத்தில்கொண்டு, சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை சீர்செய்யும் நடவடிக்கைகளில், உலக நாடுகள் தொடர்ந்து ஈடுபடவேண்டும்.இந்தியாவில் முதலீடு செய்வதற்கு, சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். முதலீட்டாளர்களுக்காக மாறுபட்ட மற்றும் விரிவான சந்தை காத்திருக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

முன்கள பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள்நாடு முழுதும் உள்ள கொரோனா முன்கள பணியாளர்களின் பணி திறனை மேம்படுத்தும் நோக்கில், அவர்களின் அன்றாட தேவைகளுக்கு ஏற்ப ஆறுவிதமான குறுகிய கால பயிற்சியினை, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சகம் வடிவமைத்துள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளை, பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நாளை துவக்கி வைக்கிறார்.மருத்துவ துறையின் தற்போதையமற்றும் எதிர்கால தேவையை கருத்தில்வைத்து, மருத்துவதுறை சாராத திறன் வாய்ந்த பணியாளர்களுக்கு இந்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.நாடு முழுதும் உள்ள, 26 மாநிலங்களில், 111 பயிற்சி மையங்களில், இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இதற்காக, 276 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்கள் பயிற்சி பெற உள்ளனர்.இதற்கிடையே, மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மற்றும் கல்யாணி மாவட்டங்களில், 250 படுக்கை வசதிகள் உடைய, கொரோனா சிறப்பு மருத்துவமனைகளை அமைக்க, 'பிஎம் கேர்ஸ்' அறக்கட்டளை நிதியில் இருந்து, 41.62 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X