ராஜ்யசபா காலி இடங்களுக்கான தேர்தலுக்கு தி.மு.க., கோரிக்கை

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 16, 2021
Share
Advertisement
'தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று ராஜ்யசபா பதவிகளுக்கும் தேர்தல் நடத்தும் ஏற்பாடுகளை, தலைமை தேர்தல் ஆணையம் காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்' என தி.மு.க., கோரியுள்ளது.டில்லியில், தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நேற்று வந்த பார்லி., தி.மு.க., தலைவர் டி.ஆர்.பாலு, தலைமை தேர்தல் ஆணையர் சுசீல் சந்திராவை சந்தித்து மனு அளித்தார். பெரும்பான்மைஅதில், 'ராஜ்யசபாவில்
ராஜ்யசபா காலி இடங்கள், தேர்தல், தி.மு.க., கோரிக்கை

'தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று ராஜ்யசபா பதவிகளுக்கும் தேர்தல் நடத்தும் ஏற்பாடுகளை, தலைமை தேர்தல் ஆணையம் காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்' என தி.மு.க., கோரியுள்ளது.டில்லியில், தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நேற்று வந்த பார்லி., தி.மு.க., தலைவர் டி.ஆர்.பாலு, தலைமை தேர்தல் ஆணையர் சுசீல் சந்திராவை சந்தித்து மனு அளித்தார்.


பெரும்பான்மை



அதில், 'ராஜ்யசபாவில் அ.தி.மு.க., - எம்.பி.,யாக இருந்த முகமது ஜான் மறைந்து விட்டதாலும், வைத்திலிங்கம், முனுசாமி ஆகியோர் எம்.பி., பதவிகளை ராஜினாமா செய்ததாலும் காலியாக உள்ள மூன்று இடங்களுக்கு, விரைந்து தேர்தல் நடத்த வேண்டும்' என கூறப்பட்டு உள்ளது.
இது குறித்து, டி.ஆர்.பாலு கூறியதாவது:தமிழகத்தில், மூன்று ராஜ்யசபா பதவிகள் காலியாக உள்ளன. இதற்கான தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது.அதை விரைந்து நடத்த வலியுறுத்தி, தி.மு.க., சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம். தமிழக சட்டசபையில் தி.மு.க., வுக்கு பெரும்பான்மை இருப்பது அனைவரும் அறிந்ததே. எனவே, இந்த மூன்று இடங்களிலும் நாங்கள் வெற்றி பெறுவதில் எந்த சந்தேகமும் இல்லை.


காலதாமதம்



ஆனால், தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதில், தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே காலதாமதம் செய்கிறதோ என தோன்றுகிறது.எனவே, இனியும் தாமதம் செய்யாமல், மூன்று இடங்களுக்கும் தனித்தனியாக குறிப்பாணை வெளியிட்டு, ஆணையம் விரைவில் தேர்தலை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.- -நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X