பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் ஆய்வு

Added : ஜூன் 16, 2021
Share
Advertisement
சென்னை:ரேஷன் கார்டுதாரர்களுக்கு உணவு பொருட்கள் சரியாக கிடைக்க, தங்களுக்கு நிர்ணயித்துள்ள இலக்கின்படி ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து, மாதத்தின் 10ம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு, கலெக்டர்களுக்கு, கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் 35 ஆயிரத்து, 250 ரேஷன் கடைகள் வாயிலாக, மாதம் 2.11 கோடி கார்டுதாரர் களுக்கு, அத்தியாவசிய உணவு பொருட்கள்

சென்னை:ரேஷன் கார்டுதாரர்களுக்கு உணவு பொருட்கள் சரியாக கிடைக்க, தங்களுக்கு நிர்ணயித்துள்ள இலக்கின்படி ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து, மாதத்தின் 10ம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு, கலெக்டர்களுக்கு, கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 35 ஆயிரத்து, 250 ரேஷன் கடைகள் வாயிலாக, மாதம் 2.11 கோடி கார்டுதாரர் களுக்கு, அத்தியாவசிய உணவு பொருட்கள் இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்கப் படுகின்றன.மொத்த கடைகளில், 33 ஆயிரம் கடைகளை கூட்டுறவு துறையும், எஞ்சிய கடைகளை உணவு துறையும் நடத்துகின்றன.கடை ஊழியர்கள், கார்டுதாரர்கள் வாங்காத பொருட்களை விற்பனை செய்தது போல் பதிவு செய்து, கள்ளச்சந்தையில் விற்பது, எடை குறைத்து வழங்குவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.

அத்தியாவசிய உணவு பொருட்கள் தரமாக, சரியான அளவில் கிடைப்பதை உறுதி செய்ய, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் ரேஷன் கடைகளில் ஆய்வு செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டு உள்ளது.அதன்படி, உணவுத் துறை கடைகளில், கலெக்டர்கள் மாதம் 10; மாவட்ட வருவாய் அலுவலர் 20; மாவட்ட வழங்கல் அதிகாரிகள் 30; துணை ஆட்சியர் 20; வட்ட வழங்கல் அதிகாரிகள், உதவி ஆணையர்கள் 50; தனி வருவாய் அலுவலர் 35 கடைகளிலும் ஆய்வு செய்ய வேண்டும்.

கூட்டுறவு கடைகளில், நுகர்வோர் பணி கூடுதல் பதிவாளர், மாதம் 20; சென்னை பொது வினியோக திட்ட இணை பதிவாளர் 50; மண்டல இணை பதிவாளர்கள் தலா 25. கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குனர் 20; தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க சார் - பதிவாளர் 30; சென்னை பொது வினியோக துணை பதிவாளர் 60 கடைகளிலும் ஆய்வு செய்ய வேண்டும்.பலர், ரேஷன் கடைகளில் சரிவர ஆய்வு செய்வதில்லை.

ஆனால், ஆய்வு செய்தது போல் பதிவுகள் செய்வதாக கூறப்படுகிறது. இதனால், ரேஷன் பொருட்களை கிடங்குகளில் இருந்து அனுப்புவது முதல், கார்டுதாரர்களிடம் வழங்குவது வரை கணினிமயமாக்கப்பட்டும், முறைகேடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை.இதையடுத்து, அதிகாரிகள் தங்களுக்கு நிர்ணயித்துள்ள இலக்கின்படி கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும்.

மாதம் தோறும், 10ம் தேதிக்குள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரும், அனைத்து மாவட்ட கலெக்டர்களும் ஒரு தொகுப்பு அறிக்கையை தயார் செய்து, உணவு வழங்கல் துறைக்கு அனுப்ப, கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.அந்த அறிக்கைகளை பரிசீலித்து, தொகுப்பு அறிக்கையை, உணவு வழங்கல் ஆணையர், மாதம்தோறும் 20ம் தேதிக்குள், அரசுக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X