பொது செய்தி

இந்தியா

மங்களூர் மரவூர் மேம்பாலம் சீரமைக்கப்படுமா அல்லது கட்டப்படுமா

Added : ஜூன் 16, 2021
Share
Advertisement
மங்களூரு-''விரிசல் ஏற்பட்டுள்ள மங்களூரு மரவூர் மேம்பாலத்தை சீரமைக்கலாமா அல்லது புதிதாக மேம்பாலம் கட்ட வேண்டுமா என்பதை நிபுணர்கள் அறிக்கை தாக்கல் செய்யவர்,'' என, ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி தெரிவித்தார்.தட்சிண கன்னடா மங்களூரில் பாஜ்பே சர்வதேச விமான நிலையத்தை இணைக்கும், மரவூர் மேம்பாலத்தில், நேற்று முன்தினம் விரிசல் ஏற்பட்டது.இதையடுத்து,

மங்களூரு-''விரிசல் ஏற்பட்டுள்ள மங்களூரு மரவூர் மேம்பாலத்தை சீரமைக்கலாமா அல்லது புதிதாக மேம்பாலம் கட்ட வேண்டுமா என்பதை நிபுணர்கள் அறிக்கை தாக்கல் செய்யவர்,'' என, ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி தெரிவித்தார்.தட்சிண கன்னடா மங்களூரில் பாஜ்பே சர்வதேச விமான நிலையத்தை இணைக்கும், மரவூர் மேம்பாலத்தில், நேற்று முன்தினம் விரிசல் ஏற்பட்டது.இதையடுத்து, மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு, இரண்டு வழிகளில் மாற்றுவழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி கூறியதாவது:விமான நிலையத்திற்கு சுலபமாக செல்லும் வகையில் நான்கு வழி மேம்பாலம் கட்டுமான பணிகள், 30 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது.ஏற்கனவே, இதன் அருகில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.அடுத்தாண்டு பிப்ரவரிக்குள் இப்பணியை முடிக்குமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.பழுதான மேம்பாலத்தை சீரமைக்கலாமா அல்லது புதிதாக மேம்பாலம் கட்ட வேண்டுமா என்பதை இரண்டொரு நாளில் நிபுணர்கள் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X