பொது செய்தி

இந்தியா

குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் காலகட்டத்தில் 3வது அலை எச்சரிக்கை

Added : ஜூன் 16, 2021
Share
Advertisement
பெங்களூரு-குழந்தைகளுக்கு சாதாரண காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் காலகட்டத்தில், கொரோனா மூன்றாவது அலைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, காய்ச்சல் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டுமென, குழந்தைகள் நல மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் தேவையான

பெங்களூரு-குழந்தைகளுக்கு சாதாரண காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் காலகட்டத்தில், கொரோனா மூன்றாவது அலைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, காய்ச்சல் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டுமென, குழந்தைகள் நல மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் தேவையான முன்னேற்பாடுகளை செய்வதற்கு, கர்நாடக மாநில மருத்துவமனைகள் தயாராகி வருகின்றன.ஜூன் இறுதி முதல் அக்., முடியும் வரை குழந்தைகளுக்கான சாதரண சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் காலமாக இருப்பதால் குழந்தைகள் நல மருத்துவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.பெங்களூரு குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறியதாவது:இந்த காலகட்டத்தில் சாதரணமாகவே குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு அதிகம் காணப்படும். சளி பிடிப்பதும், காய்ச்சல் வருவதும் நடக்கிறது.இதிலிருந்து கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை வித்தியாசப்படுத்துவது கடினமான ஒன்று.இரண்டுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதால் குழந்தைகளை பரிசோதிப்பதில் சிக்கல் உள்ளது.இதற்கு தீர்வாக, ஆண்டுதோறும் குழந்தைகளின் காய்ச்சலுக்கு போடப்படும் தடுப்பூசியை பெரிதளவில் மாநிலத்தில் முதன்மைப்படுத்த வேண்டும்.இதன் மூலம் குழந்தைகளுக்கு சாதாரண காய்ச்சல் பாதிப்பை குறைக்க முடியும். இதுவரை, 30 சதவீதம் குழந்தைகள் தான் ஆண்டுதோறும் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.நடப்பாண்டில் அதிகப்படுத்தலாம். இந்த காலகட்டத்தில் ஆண்டுதோறும், 1,000 குழந்தைகளில் 100 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.ஆனால் சாதாரண காய்ச்சலுக்கான தடுப்பூசி கொரோனாவை கட்டுப்படுத்தி விடும் என பெற்றோர் அலட்சியமாக இருக்கக்கூடாது. குழந்தைகளை முடிந்தவரை பாதுகாப்பான சூழலில் பராமரிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X