பொது செய்தி

இந்தியா

3வது அலையை சமாளிக்க பெங்களூருவில் 4,500 ஐ.சி.யு., படுக்கை வசதிகள்

Added : ஜூன் 16, 2021
Share
Advertisement
பெங்களூரு-கொரோனா மூன்றாவது அலையை சமாளிக்க, பெங்களூரில் 4,500 ஐ.சி.யூ., படுக்கைகள் தேவையாக உள்ளது என மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் கூறினர்.பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராஜேந்திர சோழன் அப்பதவியில் விடுவிக்குமதற்கு முன் கூறியதாவது:பெங்களூரு மருத்துவமனைகளில், 309 ஐ.சி.யூ., படுக்கைகள், 229 வென்டிலேட்டர் படுக்கைகள் காலியாக உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் இருப்பதையும்

பெங்களூரு-கொரோனா மூன்றாவது அலையை சமாளிக்க, பெங்களூரில் 4,500 ஐ.சி.யூ., படுக்கைகள் தேவையாக உள்ளது என மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் கூறினர்.பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராஜேந்திர சோழன் அப்பதவியில் விடுவிக்குமதற்கு முன் கூறியதாவது:பெங்களூரு மருத்துவமனைகளில், 309 ஐ.சி.யூ., படுக்கைகள், 229 வென்டிலேட்டர் படுக்கைகள் காலியாக உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் இருப்பதையும் சேர்த்து 1,300 ஐ.சி.யூ., படுக்கைகள் உள்ளன.கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள 4,500 ஐ.சி.யூ.,படுக்கைகள் தேவை. தற்போது, 15 சதவீதம் படுக்கை வசதி தான் உள்ளது.பெங்களூரு கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான படுக்கை வசதிகள் எதுவும் இல்லை. தனியார் மருத்துவமனைகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டியுள்ளது.சிக்கபல்லாப்பூர், ராம்நகர், பீதர், விஜயபுரா, சாம்ராஜ்நகர், சிக்கமகளூரு, சித்ரதுர்கா, தார்வாட், கதக், குடகு, கோலார், மாண்டியா, துமகூரு, உடுப்பி உள்ளிட்ட மாவட்ட மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான ஐ.சி.யூ.,படுக்கைகள் பத்துக்கும் குறைவு தான்.இவ்வாறு அவர் கூறினார்.பெங்களூரு மாநகராட்சி ஐ.சி.யூ.,படுக்கை வசதிக்கான நோடல் அதிகாரி ஹர்ஷா கூறியதாவது:பெங்களூரில் ஜெயநகரில், 24; சி.வி.ராமன் மருத்துவமனையில், 56; கொரோனா சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனையில், 24 ஐ.சி.யூ., படுக்கைகள் தயாராக உள்ளன.ராஜிவ்காந்தி மருத்துவமனையில், 190; கே.ஆர்.,புரம் மருத்துவமனையில், 58; எலஹங்கா மருத்துவமனையில் 17 படுக்கை வசதிகள் அமைக்கும் பணி நடக்கிறது.இன்போசிஸ் நிறுவனத்தின் உதவியால் ஆனேக்கல் மருத்துவமனையிலும் குழந்தைகளுக்கான படுக்கை வசதிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.பெங்களூரு எல்லைகளில் உள்ள எச்.எம்.டி., மருத்துவமனை, தொட்டபல்லாபூர், தேவனஹள்ளி, நெலமங்களா தாலுகா மருத்துவமனைகள், இந்திராநகர், பீனயா, ராஜாஜி நகரிலுள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளிலும் 400 படுக்கை வசதிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X