பொது செய்தி

இந்தியா

செமஸ்டெர் தேர்வுகளை விரைந்து முடிக்க நடவடிக்கை தேவை

Added : ஜூன் 16, 2021
Share
Advertisement
பெங்களூரு-''செமஸ்டர் தேர்வுகளை விரைவில் நடத்தி முடிக்க பல்கலைக்கழகம் மற்றும் கல்லுாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என, உயர்கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயணன் தெரிவித்தார்.பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன், உயர்கல்வித்துறை அமைச்சரும், துணை முதல்வருமான அஸ்வத் நாராயணா, வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று கூட்டம் நடத்தினார்.கூட்டத்தில் அவர் கூறியதாவது:கொரோனா

பெங்களூரு-''செமஸ்டர் தேர்வுகளை விரைவில் நடத்தி முடிக்க பல்கலைக்கழகம் மற்றும் கல்லுாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என, உயர்கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயணன் தெரிவித்தார்.பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன், உயர்கல்வித்துறை அமைச்சரும், துணை முதல்வருமான அஸ்வத் நாராயணா, வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று கூட்டம் நடத்தினார்.கூட்டத்தில் அவர் கூறியதாவது:கொரோனா இரண்டாவது அலையால் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழகம் மற்றும் கல்லுாரி நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும்.மாணவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனரா என்பதை நிர்வாகத்தினர் உறுதிபடுத்த வேண்டும்.மாணவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் வரும் கல்வியாண்டில் எந்த பாதிப்பும் இல்லாமல் கல்லுாரியை நடத்த இயலும்.பி.யு.சி., இரண்டாமாண்டு தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகமான மாணவர்கள் உயர்கல்வி செல்வதற்கான வாய்ப்புள்ளது.பல்கலைக்கழகம் மற்றும் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நான்காண்டு இளநிலை பட்டபடிப்பை செயல்படுத்தலாம்.அடுத்த இரண்டு கல்வியாண்டுக்கான அட்டவனை தயாராக உள்ளது. முதலாண்டு மாணவர் சேர்க்கையை அக்., முதல் வாரத்தில் துவக்குவதற்கான பணிகளை துணைவேந்தர்கள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X