பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி பெற்ற பெண்ணிடம் காந்த சக்தி கண்டுபிடிப்பு

Added : ஜூன் 16, 2021
Share
Advertisement
பெங்களூரு-மஹாராஷ்டிரா, குஜராத், உடுப்பியை தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி பெற்ற, பெங்களூரின் பெண்ணிடம், காந்த ஈர்ப்பு சக்தி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலரின் உடலில், காந்த சக்தி ஏற்படுகிறது. குஜராத்தில் ஒரு நபரின் உடலில் நாணயங்கள், பாத்திரங்கள் ஒட்டிக்கொண்டன.மஹாராஷ்டிரா நாசிக்கின் நபரொருவர், இரண்டு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி

பெங்களூரு-மஹாராஷ்டிரா, குஜராத், உடுப்பியை தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி பெற்ற, பெங்களூரின் பெண்ணிடம், காந்த ஈர்ப்பு சக்தி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலரின் உடலில், காந்த சக்தி ஏற்படுகிறது. குஜராத்தில் ஒரு நபரின் உடலில் நாணயங்கள், பாத்திரங்கள் ஒட்டிக்கொண்டன.மஹாராஷ்டிரா நாசிக்கின் நபரொருவர், இரண்டு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி பெற்றிருந்தார். இவரது உடலிலும், இத்தகைய காந்த சக்தி ஏற்பட்டுள்ளது.உடுப்பியை சேர்ந்த நபரொருவரின் உடலில், ஸ்பூன், நாணயங்கள் ஒட்டிக்கொண்டதாக, தகவல் வெளியானது.பெங்களூரு பெல்லந்துாரில் வசிக்கும் ஜோதி கவுடா என்பவர், ஏப்., 26ல் முதல் டோஸ், மே 29ல் இரண்டாவது டோஸ், தடுப்பூசி பெற்றார்.தடுப்பூசி பெற்றவர்களின் உடலில், காந்த சக்தி ஏற்பட்டதாக, ஊடகங்கள் மூலம் அறிந்த அவர், ஸ்பூன், கீ செயினை தன் வலது தோளில் வைத்து சோதித்த போது, அது ஒட்டிக்கொண்டது.இடது தோள், கால்களில் வைத்த போது ஒட்டவில்லை. இவருடன், தடுப்பூசி எடுத்திருந்த கணவருக்கு, எந்த பின் விளைவும் ஏற்படவில்லை.அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:கொரோனா தடுப்பூசி, மனிதரின் உடலில் எந்த பின் விளைவுகளும் ஏற்படுத்தாது. தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது. உலோக அம்சங்கள், தடுப்பூசியில் இல்லை. லேசான தலைவலி, ஊசி போட்ட இடத்தில் வலி அல்லது வீக்கம், லேசான காய்ச்சல் ஏற்படுவது சகஜம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X