பொது செய்தி

இந்தியா

பெங்களூருவில் துணை நகர ரயில் திட்டம்

Added : ஜூன் 16, 2021
Share
Advertisement
பெங்களூரு-பெங்களூரின் போக்குவரத்து நெருக்கடிக்கு, தீர்வு காணும் நோக்கில், துணை நகர ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை 148 கி.மீ.,யிலிருந்து, 317 கி.மீ., ஆக விஸ்தரிக்க ஆலோசிக்கப்படுகிறது.பெங்களூரில், வாகன போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கர்நாடக ரயில்வே அடிப்படை வசதிகள் நிறுவனம், துணை நகர ரயில்

பெங்களூரு-பெங்களூரின் போக்குவரத்து நெருக்கடிக்கு, தீர்வு காணும் நோக்கில், துணை நகர ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை 148 கி.மீ.,யிலிருந்து, 317 கி.மீ., ஆக விஸ்தரிக்க ஆலோசிக்கப்படுகிறது.பெங்களூரில், வாகன போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கர்நாடக ரயில்வே அடிப்படை வசதிகள் நிறுவனம், துணை நகர ரயில் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.நகர போக்குவரத்து வசதியை மேம்படுத்தும், துணை நகர திட்டத்துக்கு, 'டல்ட்' எனும் நில போக்குவரத்து இயக்குனரகம், பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஒருங்கிணைந்து, விரிவான திட்ட அறிக்கை தயாரித்துள்ளது.இத்திட்டத்தின் பாதையை, 148 கி.மீ.,லிருந்து, 317 கி.மீ., ஆக அதிகரிக்க, ஆலோசித்து வருகிறது.இது குறித்து மாநில அரசு, ரயில்வே துறையுடன் பேச்சு நடத்திய பின், முடிவு செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ரயில்வே அதிகாரியொருவர் கூறியதாவது:ஊரக ரயில் திட்டத்தின் பாதை விஸ்தரிக்கப்பட்டால், பங்கார்பேட், ஓசூர் உட்பட, பல்வேறு இடங்களுக்கு ரயில்பாதை விரிவடையும். பாதை 317 கி.மீ., ஆக விஸ்தரிக்கப்பட்டால், 2031ன் வேளையில், பெங்களூரின் போக்குவரத்து நெருக்கடி, கணிசமாக குறையும்.தற்போது திட்டத்துக்கு, 15 ஆயிரத்து 767 கோடி ரூபாய் செலவிடப்படும். பாதை விஸ்தரிக்கப்பட்டால்,7,100 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்.இதற்கு தேவையான பொருளாதார வசதியை, செய்து கொண்ட பின், திட்டத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X